உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில் நம் இசைஞானி இளையராஜாவுக்கு 9 ஆம் இடம் கிடைத்துள்ளது.
இந்திய படங்கள் மட்டுமல்லாது உலகப் புகழ் பெற்ற பில்லார்மோனிக் கம்பெனிக்கு இசைத்ததன் காரணமாக மேஸ்ட்ரோ பட்டம் பெற்று உலகின் கவனத்தைக் கவர்ந்தார் இளையராஜா.
இன்றைக்கு ஹாலிவுட்டின் உலகப் புகழ் பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஜெர்ரி கோல்ட்ஸ்மித்் மற்றும் கிறிஸ்டபர் நோலன் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் ஹேன்ஸ் ஜிம்மர் ஆகியோருக்கு இளையராஜாவுக்கு அடுத்தபடியாக முறையே 10 மற்றும் 13 ஆம் இடங்களே இந்தப் பட்டியலில் கிடைத்துள்ளன.
இது இந்திய இசைக்கு குறிப்பாக தமிழ் இசைக்கு கிடைத்த மரியாதையாகவே கொள்ள முடியும். அந்தப் பெருமையைப் படைத்த இளையராஜா நமக்குக் கிடைத்தது நம் பாக்கியம் என்றே சொல்லலாம்..!