January 23, 2026
  • January 23, 2026
Breaking News
August 30, 2020

கொரோனா வார்டு கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ

By 0 705 Views

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதைப் பார்த்து, தானே அதனை சுத்தம் செய்தார்.

அமைச்சரே இவ்வாறு கழிவறையை சுத்தம் செய்வதைப் பார்த்த ஊழியர் ஒருவர் “நாங்கள் சுத்தம் செய்கிறோம்…” என்று முன்வர, அதற்கு அமைச்சர்,”நீங்கள் சுத்தம் செய்யாததால் தான் நான் இப்போது சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன். நாளை வந்து பார்ப்பேன், அப்போதும் சுத்தமில்லாமல் இருந்தால் நானே சுத்தம் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சபாஷ் அமைச்சர்..!