April 17, 2025
  • April 17, 2025
Breaking News
  • Home
  • கல்வி
  • அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வருகிறது
July 25, 2018

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வருகிறது

By 0 1772 Views

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோலவே, அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க கோரிக்கை விடப்பட்ட நிலையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநிலக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

“ஆங்கில வழிக் கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாணை தெரிவிக்கிறது.

அரசாணையில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு…

ஆங்கில வழிக் கல்விக்காக மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழிப் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழிக்கல்வி நடத்தினாலும் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழிக்கல்வியாக இருக்க வேண்டும்.