April 29, 2024
  • April 29, 2024
Breaking News
  • Home
  • தமிழக அரசு

Tag Archives

தமிழக அரசு தொடங்கிய கல்வி தொலைக்காட்சி

by on August 26, 2019 0

கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் […]

Read More

பிளாஸ்டிக் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஐகோர்ட் கேள்வி!

by on January 29, 2019 0

ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், உத்தப் பிரதேசம் மாநிலங்களில் தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை என மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் பிளாஸ்டிக் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 விதமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் உள்ளது. இந்நிலையில் பிஸ்கட், சாக்லேட், சாம்பூ மற்றும் அழகு […]

Read More

ஹைகோர்ட் புதிய உத்தரவால் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு

by on January 11, 2019 0

பொங்கல் பரிசாக அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப் பொருள்களுடன் ரூ. 1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை ஜேசுதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டது. இதில் சிக்கல் என்னவென்றால் சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். இவர்களில் கடந்த 9-ந்தேதி […]

Read More

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வருகிறது

by on July 25, 2018 0

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே, அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க கோரிக்கை விடப்பட்ட நிலையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநிலக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். “ஆங்கில வழிக் கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு […]

Read More

தர்மபுரி பஸ் எரிப்பு, நாவரசு கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிசீலனை

by on July 8, 2018 0

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் அதற்குத் தகுதியான கைதிகள் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க.வினர் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோர் கடந்த 18 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால அவர்களை விடுவிக்க ஆலோசனை நடந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு […]

Read More

நீட் எழுத வெளிமாநிலம் செல்வோருக்கு பயணத்தொகையுடன் ரூ.1000 – தமிழக அரசு

by on May 4, 2018 0

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதிக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மாநில அளவில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் […]

Read More