October 16, 2025
  • October 16, 2025
Breaking News
November 18, 2019

என் வாழ்வில் சிறந்த டப்பிங்கில் ஒன்று தர்பார்

By 0 812 Views

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வர, முழுவீச்சில் ரஜினி டப்பிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விஷயம்.

அந்த டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. படத்தின் முதல் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது டப்பிங்கும் முடிந்து விட, இதனையடுத்து டீஸர், டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் துவங்கும். அடுத்த ‘ட்ரெண்டிங்’குக்கான படம் கண்டிப்பாக ‘தர்பார்’ ஆகத்தான் இருக்கும்.

‘தர்பார்’ டப்பிங் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிடும்போது, “என் வாழ்வில் சிறந்த டப்பிங்குகளில் ஒன்று ‘தர்பார்..!” என்று மனமுவந்து கூறியிருக்கிறார். அது ரஜினி யுடன்’டப்’ பண்ணியது பற்றிய பெருமையன்றி வெறென்ன..?.

முதல்வனில் ‘கோட்டை’ விட்டதை ‘தர்பார்’ அமைத்து பிடிப்பாராரா ரஜினி சார்..?