தமிழ் சினிமாவில்படம் வெளியீட்டுக்கு முன்பு வெளியான பின்பு கருத்து ரீதியாக சர்ச்சைகளை சந்தித்த படங்கள் ஏராளம்.
முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வரும் பிரச்சினைகள் வேறு விதமானவை. ஆனால் கருத்தியல் ரீதியாக பிரச்சினை தாங்கி வரும் சிறு முதலீட்டு படங்கள் சந்திக்கும் சவால்கள் கொடுமையானவை.
இப்படி சிக்கிய படங்கள் வெளிவருவது கேள்விக்குறியாகி விடும். ஆனால், தணிக்கைத் துறையில் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு மத்திய மாநில ஆணையங்களின் சந்தேகங்களுக்கு, புகார்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்ற முதல் சிறிய படம் திரெளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சினை களாலேயே பிரபலமாகி சுமார் 3 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகியுள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதன் மூலம் 300 திரைகளில் திரையிடப்படும் பட்சத்தில் முதல் நாள் மூன்று கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்து, பட்ஜெட் படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமாக சாதனை நிகழ்த்துவதற்கு வாய்ப்பிருப்பதாக திரையரங்கு விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது கோலிவுட் பண்டிட்டுகளை வாய் பிளக்க வைத்தும் இருக்கிறது.