January 27, 2025
  • January 27, 2025
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் – ன் தொடக்கநிலை பொது பங்கு வெளியீடு (ஐபிஓ)
January 26, 2025

டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் – ன் தொடக்கநிலை பொது பங்கு வெளியீடு (ஐபிஓ)

By 0 39 Views

2025 ஜனவரி 29, புதன்கிழமையன்று தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் – ன் தொடக்கநிலை பொது பங்கு வெளியீடு (ஐபிஓ)

• ஒரு ஈக்விட்டி பங்குக்கு ₹382/- முதல் ₹402/- வரை விலை வரம்பு நிர்ணயம்

சென்னை: ஜனவரி, 2025: கண் பராமரிப்பு சேவைகள் தொழில்துறையில் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டாகவும் மற்றும் இயக்க செயல்பாடுகளிலிருந்து நிதியாண்டு 2024-ல் பெற்ற வருவாய் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய கண் பராமரிப்பு சேவை சங்கிலித்தொடர் நிறுவனம் என CRISIL MI&A அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெட், ஒவ்வொன்றும் ₹1/- முகமதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹382/- முதல் ₹402/- வரை வெளியீட்டு விலை வரம்பை நிர்ணயித்திருக்கிறது.

இந்நிறுவனத்தின் தொடக்கநிலை பொது பங்கு வெளியீடு (“ஐபிஓ” அல்லது “ஆஃபர்”), 2025 ஜனவரி 29 புதன்கிழமை அன்று தொடங்கி, 2025 ஜனவரி 31 வெள்ளி அன்று நிறைவடையும். குறைந்தபட்சம் 35 ஈக்விட்டி பங்குகளுக்கும் மற்றும் அதன்பிறகு 35 ஈக்விட்டி பங்குகளின் பன்மடங்கிற்கும் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வெளியீடானது, 1,579,399 ஈக்விட்டி பங்குகள் வரை பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டு அளவையும் மற்றும் 1,129,574 ஈக்விட்டி பங்குகள் வரை பங்குதாரர்களுக்கான ஒதுக்கீட்டு அளவையும் கொண்டிருக்கிறது.

இந்த ஐபிஓ, ரூ.300 கோடி வரை புதிய வெளியீட்டின் கலவையாகவும் மற்றும் புரமோட்டர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் விற்பனை செய்யும் பிற பங்குதாரர்களால் 67,842,284 ஈக்விட்டி பங்குகள் வரை விற்பனைக்கான ஆஃபராகவும் இருக்கிறது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் நிதியானது, ரூ.195 கோடி என்ற அளவு வரை அதன் கடன் பொறுப்புகளுக்கு பகுதியளவு அல்லது முழுமையாக திரும்பச் செலுத்துவதற்கு அல்லது முன்தொகை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும். எஞ்சியுள்ள தொகையானது, பொது கார்ப்பரேட் நோக்கங்களுக்காகவும் மற்றும் இதுவரை அடையாளம் காணப்படாத வெளி நிறுவனங்களை கையகப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும்.

டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த்கேர், முழுமையான, விரிவான கண் பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது, கண் புரை, ஒளிவிலகல் மற்றும் பிற அறுவைசிகிச்சைகள், கலந்தாலோசனைகள், நோயறிதல்கள் மற்றும் அறுவைசிகிச்சை அல்லாத பிற சிகிச்சைகள் இதில் உள்ளடங்கும்; மேலும், கண் கண்ணாடிகள், கான்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் துணை உபகரணங்கள் ஆகியவற்றோடு கண் பராமரிப்பு தொடர்புடைய மருந்துப் பொருட்களையும் இது விற்பனை செய்து வருகிறது. 2024 செப்டம்பர் 30-ம் தேதி வரை 209 சிகிச்சை / சேவை அமைவிடங்களின் வலையமைப்பின் மூலம் இச்சேவைகளை டாக்டர். அகர்வால்ஸ் வழங்கி வருகிறது. CRISIL MI&A அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இதன் தகவல் கையேட்டின்படி, நிதியாண்டு 2024-ல் இந்தியாவில் மொத்த கண் பராமரிப்பு சேவை சங்கிலித்தொடர் சந்தையில் சுமார் 25% பங்கினை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

2024 செப்டம்பர் 30 காலஅளவில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 193 கண் பராமரிப்பு சேவை அமைவிடங்களை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. அத்துடன், ஆப்ரிக்காவில் 9 நாடுகளில், 16 கண் மருத்துவ சேவை மையங்களும் இந்நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இந்நிறுவனமானது, ஹப் மற்றும் ஸ்போக் மற்றும் அசெட் லைட் இயக்க மாதிரி வழியாக இந்நிறுவனம் இயங்குகிறது. CRISIL MI&A அறிக்கையின்படி, முதல் அடுக்கு பெருநகரங்களில் 70 மையங்களையும் மற்றும் பிற நகரங்களில் 123 மையங்களையும் உள்ளடக்கிய பன்முக செயலிருப்பை இந்தியாவெங்கும் இந்நிறுவனம் பெற்றிருக்கிறது.

கண் பராமரிப்பு சேவைகள் தொழில் துறையில் 35 ஆண்டுகளுக்கும் அதிகமான மருத்துவ அனுபவத்தைக் கொண்டிருக்கும் இதன் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கி வரும் டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர், கண் மருத்துவவியலில் அறுவைசிகிச்சையில் பல்வேறு புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்னோடியாக செய்திருக்கிறது; மேலும், உலகளவில் புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறது. டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர் கொண்டிருக்கும் சில முக்கியமான அறுவைசிகிச்சை திறன்களுள் உள்விழி லென்ஸ் பொருத்தல் செயல்முறைகள், கருவிழி மாற்றுசிகிச்சை, ஊசித்துளை பியூப்பிலோபிளாஸ்டி, சிங்கிள் பாஸ் ஃபோர் – த்ரோ பியூப்பிலோபிளாஸ்டி மற்றும் LASIK அறுவைசிகிச்சைகள் ஆகியவை உள்ளடங்கும்.

கோடக் மஹிந்திரா கேபிட்டல் கம்பெனி லிமிடெட், மார்கன் ஸ்டான்லி இந்தியா கம்பெனி பி.லிமிடெட், ஜெஃப்ரீஸ் இந்தியா பி.லிமிடெட், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் ஆகியவை இப்பங்கு வெளியீட்டின் பதிவேடு மேலாண்மைக்கான முதன்மை மேலாளர்களாகவும் மற்றும் KFin டெக்னாலஜிஸ் லிமிடெட் இவ்வெளியீட்டின் பதிவாளராகவும் செயல்படுகின்றன.

பங்குகளின் விலையைத் தீர்மானிக்க உதவுகின்ற புக் – பில்டிங் செயல்முறை வழியாக இந்த வெளியீடு மேற்கொள்ளப்படுகிறது; இதில் 50% – க்கும் மிகைப்படாத அளவானது, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீட்டிற்கு கிடைக்கப்பெறும்; ஆஃபரில் 15% மற்றும் 35% – க்கு குறையாத அளவு பங்குகள் முறையே நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் மற்றும் ரீடெய்ல் தனிநபர்களுக்கும் கிடைக்கப்பெறும்.

மேற்கோள் சான்றுக்கான குறிப்புகள்:

விலை வரம்பின் மேல் மற்றும் கீழ்ப்புற முனை அடிப்படையில் ஐபிஓ – ன் வெளியீட்டு அளவு