January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கலைஞர் கதை வசனத்தில் “கலைஞரின் கண்ணம்மா” படத்தை இயக்கிய பாபா விக்ரம் மரணம்
April 8, 2022

கலைஞர் கதை வசனத்தில் “கலைஞரின் கண்ணம்மா” படத்தை இயக்கிய பாபா விக்ரம் மரணம்

By 0 814 Views

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கதை வசனத்தில் மீனா பிரேம்குமார் நடித்த “கலைஞரின் கண்ணம்மா” படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ் எஸ் பாபா விக்ரம்.2005 ல் வெளிவந்த அந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து கருணாஸ் கோவை சரளா நாசர் ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த “பொம்மை நாய்கள்” என்ற படத்தை தயாரித்து இயக்கினார். தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் “அதிர்ஷ்டம்” என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்தார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தனது மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில்..

இன்று (8.4.2022) மாலை 5 மணி அளவில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் நாளை காலை 11 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது. ஆழ்வார்குறிச்சியில் அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வீட்டு முகவரி,:

 

எண்: 14, நடுத்தெரு ஆழ்வார்குறிச்சி தென்காசி மாவட்டம்

 

தொடர்புக்கு:

கண்ணம்மா (மகள்)