July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் தேவரகொண்டா நடித்தது எனக்கு வசதி – நோட்டா இயக்குநர் ஆனந்த் சங்கர்
September 30, 2018

விஜய் தேவரகொண்டா நடித்தது எனக்கு வசதி – நோட்டா இயக்குநர் ஆனந்த் சங்கர்

By 0 1213 Views

‘நோட்டா’ படத்தில் ‘விஜய் தேவரகொண்டா’வை தமிழுக்கு அறிமுகப்படுத்த நினைத்த காரணத்தைக் கேட்டபோது இயக்குநர் ஆனந்த் சங்கர் கூறியது…

“நோட்டா’ ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது. காரணம் இதில் ஹீரோவைத்தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது.

அப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ‘விஜய் தேவரகொண்டா’ உருவாகிக்கொண்டு இருந்தார். தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர்.

“ஏன் இவரையே தமிழ் பேசவைக்க கூடாது..?” என முடிவு செய்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சைக்கொடி காட்டவே ‘விஜய் தேவரகொண்டா’வை சந்தித்து கதை சொன்னேன். முதலில் அரைமணி நேரம் கதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன்.

ஆனால் அன்று மாலையே என்னை அழைத்து முழுக்கதையும் சொல்லுங்கள் என கூறியபோதே இந்தப்படத்தின் கதாநாயகன் இருக்கையில் அவர் அமர்ந்துவிட்டார். மொழி தெரியாத ஹீரோ என்பதால் வசனங்களை எதுவும் அவர் மாற்ற சொல்லாமல் நடித்து எனக்கு வசதியாக இருந்தது.

படத்தில் அவரது தமிழ் உச்சரிப்பு எந்தவித மாறுபாடும் கண்டுபிடிக்க முடியாதவாறு அவ்வளவு நேச்சுரலாக இருக்கிறது..!”