இன்றைக்கு இருக்கும் நடிகர்களில் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் யோகிபாபுதான். நாள் கணக்கு கால்ஷீட்டில் அவரை நடிக்கவைத்துத் தங்கள் படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்கள் இன்றைய கோலிவுட் படைப்பாளிகள்.
அப்படித்தான் அவரை சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்குக் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அனுபவமில்லாத இயக்குநருக்கு யோகிபாபுவை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியாமல் சொதப்பியதில் அவரை இரண்டு நாள்களில் வெட்டியாக்கி இரண்டொரு வசனம் பேசவைத்து அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் நின்ற இடத்திலேயே நிற்க வைத்துப் படம் பிடித்ததில் யோகிபாபு ரொம்பவே அப்செட்டிலிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் ஆடியோ நிகழ்வில் யோகிபாபுவை அழைத்தும் அவர் அப்செட்டில் வரவில்லை. ஆனால், அந்த நிகழ்வில் யோகிபாபு இந்தப்படத்தில் கலக்கியிருப்பதாக அடித்துவிட்டார்கள்.
இந்த விஷயம் யோகிபாபு காதுக்குப் போக, அவர் மேலும் அப்செட்டாகி தன் தரப்பிலிருந்து தன்னை ஊறுகாய் போல் பயன்படுத்தி அதையும் பப்ளிசிட்டிக்குப் பயன்படுத்திக் கொள்வதில் தன் வேதனையைத் தெரிவித்தாராம்.
இது ஒருபுறமிருக்க… படத்தின் வியாபாரம், மற்றும் பப்ளிசிட்டியைப் பார்த்துக்கொள்ள ஒரு கறாரான டீம் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறதாம். அவர்கள் சேனல்கள் உள்பட யாரையும் மதிக்காமல் “யாருடைய பப்ளிசிட்டியையும் நம்பி நாங்கள் இல்லை. படம் இப்பவே சூப்பர் டூப்பர் ஹிட்…” என்னும் ரீதியில் நடந்து கொண்டிருக்கின்றராம்.
இதில் யோகிபாபுவின் எரிச்சலும் சேர்ந்து கொள்ள, “இனி வரும் பப்ளிசிட்டி விஷயங்களில் யோகிபாபு இருந்தால் தூக்குங்கடா… அவரால்தான் படம் ஓடணுமா… ஹரீஷ் ஒருத்தர் போதும் படம் பிச்சுக்கும்…” என்று ‘அஜித்’ ரேஞ்சுக்கு ஹரீஷுக்கு பில்டப் கொடுத்து விளம்பர டிசைனருக்குக் கட்டளையிட்டு எல்லா விளம்பரங்களில் இருந்தும் யோகிபாபுவைத் தூக்கியிருக்கிறது அந்த டீம்.
நமக்கு என்ன சந்தேகம் என்றால் யோகிபாபு நடித்த அந்த இரண்டு நாள் ‘ஸ்டேன்டிங் காமெடி’ காட்சிகளாவது படத்தில் இருக்குமா என்பதுதான்..!
இந்தக் கூத்துகளெல்லாம் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்குத் தெரியாது என்பதுதான் ஹைலைட். கடைசியில் ரிசல்ட் வரும்போது “எப்படியெப்படியோ சேர்த்த காசையெல்லாம் எதற்கடா இப்படி ஒரு கூட்டத்தை நம்பி விட்டோம்..?” என்று அவர் வருந்தக் கூடும்.
அனுபவம் இல்லாமல் சரியான டீமை அமைத்துக்கொள்ளாத புராஜக்டுகள் எல்லாம் இப்படித்தான் நல்ல தயாரிப்பாளர்களை காலிபண்ணி வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
அதுதான் கோலிவுட் கூத்து..!