November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது
September 14, 2022

அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது

By 0 524 Views

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. .

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவை தேர்தலில் களமிறங்கின.

இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்சிகளை பதிவுசெய்தும், அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் 2,796 கட்சிகள் பதிவு செய்துள்ளன. அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது