August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ராஜ்கிரணை பணம் கேட்டு மிரட்டுகிறார் வளர்ப்பு மகள்..?
December 3, 2022

ராஜ்கிரணை பணம் கேட்டு மிரட்டுகிறார் வளர்ப்பு மகள்..?

By 0 395 Views

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பின்னணி இதுதான்…

ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள். காதல் விவகாரத்தில் கூட இந்த வயதில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை சொல்லி திருத்தினார்கள்.

இருந்தாலும் தற்போது ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்தார். அந்த நபரை அழைத்து ராஜ்கிரண் பேசியிருக்கிறார். பிறகு தன் வளர்ப்பு மக்களிடம் அவர் தவறான நபராக இருக்கிறார் – வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் ராஜ்கிரண் உன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு நாங்கள் சொல்லியும் கேட்காமல் நீ அவரை திருமணம் செய்துகொண்டால் எங்களுக்கு உனக்கும் எந்தத்தொடர்பும் இருக்காது எந்த உதவியும் செய்யமாட்டோம் என்று தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் அவரது வளர்ப்பு மகள், தான் காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு போய்விட்டார்.

சமீபத்தில் அந்தப்பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து விளம்பரப்படம் ஒன்றில் ராஜ்கிரண் மகள் என்று சொல்லி நடித்திருக்கிறார். இதனை ராஜ்கிரண் கண்டித்துள்ளார்.

அவர்களும் இனிமேல் உங்கள் பெயரைப் பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்கள். ஆனால், அதோடு நிறுத்தாமல் தொடர்ந்து அதைச்செய்து வந்திருக்கிறார்கள்.

பணத் தேவை அவர்களுக்கு இருப்பதால்  உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, அசிங்கப்படுத்தி காசு பிடுங்கிவிடுவோம் என்று மிரட்டி தங்களுக்கு 30 இலட்சத்திற்கு மேல் தரவேண்டும் என்றும் மிரட்டி அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது.

அத்தோடு இல்லாமல் ராஜ்கிரணின் மனைவியுடைய வேறு வழியில் பிறந்த குழந்தை என்று தப்பு தப்பாக கிளப்பிவிடுவேன் என்று தொலைபேசியில் பகிரங்கமாக மிரட்டிவருவதாகவும் தெரிகிறது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம் ராஜ்கிரண்.

குழந்தையைத் தத்தெடுத்து தங்கள் குழந்தையாக அன்பையூட்டி வளர்த்தார்கள். அது இப்படியா முடியவேண்டும்? பாம்பிற்குப் பாலை வார்த்தது போலாகிவிட்டது என ராஜ்கிரணனின் நண்பர்கள் வருத்தத்துடன் சொல்கிறார்கள்.