September 1, 2025
  • September 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ் பட தலைப்பு வெளியானது
February 19, 2020

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ் பட தலைப்பு வெளியானது

By 0 658 Views

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஜகமே தந்திரம் ‘ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட பட்டிருக்கிறது.

‘ அசுரன்’படம் வெளியாவதற்கு முன்பே , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் கால்ஷீட் கொடுத்திருந்தா தனுஷ்.

லண்டனில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரேகட்டமாக லண்டனிலியே சுமார் 90% காட்சிகளைப் படமாக்கிவிட்டு  பின்னர் மதுரை, ராமேஸ்வரம் ஆகியவற்றில் சில காட்சிகளைப் படமாக்கி, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக அறிவிித்தார்க்

இதனிடையே இன்று (பிப்ரவரி 19) ‘தனுஷ் 40’ படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இந்தப் படத்துக்கு ‘ஜகமே தந்திரம்’ எனப் பெயரிட்டு. வந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

மேலும், லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிவித்திருக்கிறார்கள்.