November 22, 2024
  • November 22, 2024
Breaking News
October 30, 2020

காற்றை விட உணவு தண்ணீர் மூலம் கொரோனா வேகமாகப் பரவும்

By 0 574 Views

காற்றில் கொரோனா பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவும் என ஹார்வர்டு சான் பப்ளிக் ஸ்கூல் நிலையத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அன்றாடம் மெஸ்களில் உணவு உண்போருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏவியேஷன் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

விமானங்களில் சமூக விலகலை கடைபிடித்து பயணம் செய்வது எப்படி என துவங்கிய இந்த ஆராய்ச்சி, தொடர்ந்து உணவு மூலமாக கொரோனா பரவும் அபாயம் குறித்து ஆராயப்பட்டது.

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாகக் கழுவி வெயிலில் காயவைத்து பிறகு சமைப்பது கொரோனா தாகத்தைக் குறைக்கும். ஆனால் உணவு விடுதிகளில் இவ்வாறு செய்கிறார்களா என்பது நமக்கு தெரியாது.

ஆகவே உணவு விடுதிகளில் பருகும் தண்ணீர் சாப்பிடும் உணவு ஆகியவற்றால் கொரோனா தாக்கம் மேலும் அதிகமாகும். தும்மல், இருமல் மூலமாக சிதறும் எச்சில் துளிகள் காரணமாக காற்றில் கொரோனா பரவும் வேகத்தைக் காட்டிலும் காய்கறி, பழங்கள் மூலமாக பரவும் வேகம் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே அனைவரும் வீட்டில் சமைத்து உண்பதே இதற்கு சிறந்த மாற்று வழி என அவர்கள் தெரிவிச்சிருக்காய்ங்க.