July 14, 2025
  • July 14, 2025
Breaking News
November 4, 2020

பள்ளி திறந்த 3ஆவது நாளில் 150 மாணவர்கள் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு

By 0 556 Views

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநில நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்களில் சித்தூர் மாவட்டத்தில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே பெருவாரியான மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.