January 6, 2026
  • January 6, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காமெடியனுக்கு கனிந்த அமெரிக்க காதல் 4 நாளில் திருமணம்
June 20, 2020

காமெடியனுக்கு கனிந்த அமெரிக்க காதல் 4 நாளில் திருமணம்

By 0 653 Views

தயாரிப்பாளர்  எல்எம்எம் சுவாமிநாதனும் ஒரு நடிகர்தான். இது அவரது மகன் நடிகர் அஸ்வின் பற்றிய செய்தி.

‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான அஸ்வின் ‘ வந்தான் வென்றான் ‘, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘, ‘ நெடுஞ்சாலை ‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதில் ‘ கும்கி ‘ படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்ததால் தன்னுடைய பெயரை ‘ கும்கி அஸ்வின் ‘ என்று மாற்றிக் கொண்டார். தொடர்ந்து பல தமிழ்ப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அஸ்வின் விரைவில் அவருடைய காதலியை திருமணம் செய்ய போகிறார்.

எஸ்… அமெரிக்காவில் படித்த வித்யாஸ்ரீயும் அஸ்வினும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்களாம். இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள்.

தற்போது கரோனா சூழல் காரணமாக நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் 4 நாட்களில் -அதாவது வருகின்ற ஜூன் 24ஆம் தேதி அஸ்வினுடைய வீட்டில் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது.

இங்கிருந்தே அட்சதை போடுவோம்..!