March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகை சாக்‌ஷி அகர்வால் அறிவிப்பால் சீனா மிரண்டது
June 20, 2020

நடிகை சாக்‌ஷி அகர்வால் அறிவிப்பால் சீனா மிரண்டது

By 0 391 Views

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டாராம். 

இது பற்றி அவர்…

“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.

இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் இந்த செயலால் சீனா மிரண்டு போயிருப்பதாக கேள்வி..!