January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நயன்தாராவுக்கும் எனக்கும் கொரோனா என்பவர்கள் ஜோக்கர்கள் – விக்னேஷ் சிவன்
June 21, 2020

நயன்தாராவுக்கும் எனக்கும் கொரோனா என்பவர்கள் ஜோக்கர்கள் – விக்னேஷ் சிவன்

By 0 879 Views

சமீபத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்த பிரபல நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் பதிவிட்ட, ‘வாட்ஸ்- ஆப்’ பதிவில், ‘நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதித்து, பல லட்சம் ரூபாய் செலவழித்து, சிகிச்சை பெறுகின்றனர். இல்லாதவர்களின் நிலை சிரமமாக உள்ளது. அதனால், அனைவரும் பாதுகாப்போடு இருங்கள். கரோனாவை விட, தனிமையே நம்மை கொன்று விடும்’ என, கூறியிருந்தார்.

இந்நிலையில், நயன்தாராவுக்கும், எனக்கும் கரோனா தொற்று என்பது உண்மை இல்லை என்றும், நாங்கள் நல்ல உடல் நலத்துடன்…  இது போன்று மீடியாவில் எழுதும் ஜோக்குகளையும் ஜோக்கர்களையும் நினைத்து சிரித்துக்கொண்டு இருக்கிரோம் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னையும், நயன்சையும் app இல் குழந்தைகள் போல் மாற்றி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அது கீழே…