December 21, 2025
  • December 21, 2025
Breaking News
February 26, 2020

20 தோற்றங்களில் சீயான் நடிக்கும் கோப்ரா முதல் பார்வை 28ஆம் தேதி

By 0 849 Views

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.

விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

கேஜிஎப் படத்தின் ஹீரோயின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கோப்ரா படத்துக்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். ஒளிப்பதிவு ஹரிஸ் கண்ணன். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படம் தயாராகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் வெள்ளியன்று ( பிப்ரவரி 28 ) வெளியாகிறது.