October 14, 2025
  • October 14, 2025
Breaking News
April 30, 2018

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்

By 0 1142 Views

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதி மன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார். பரபரப்பான சூழலில் இந்த சந்திப்பு நிகழ்வதால் காவிரி விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் அவர் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் வரைவு செயல் திட்டத்தின் அம்சங்களைப் பொறுத்து, தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படலாம்.