January 5, 2026
  • January 5, 2026
Breaking News
October 7, 2020

உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் சாட்சி – முதல்வர் கடிதம்

அதிமுக முதல்வர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளது வருமாறு…
 
“என் மக்கள் எதற்காகவும் யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெ. கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகின்ற கடமை நம்முன்னே காத்திருக்கிறது. வெறும் எழுத்துகளால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்றுவிடாது. 
 
2021 ஆம் ஆண்டிலும் 3-வது முறையாக அதிமுக ஆட்சி தொடரும். தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைப்பதை நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம். 
 
அதிகாரத்துக்கு அலைவோரை வென்றெடுக்க ஒற்றுமையாய் ஓர் குரலாய் அணி வகுப்போம். அதிமுகவின் வம்சாவளி அரசியல் இல்லை, உழைத்தால் உயர முடியம் என்பதற்கு நானும் ஒரு சாட்சி..!”