August 30, 2025
  • August 30, 2025
Breaking News
November 27, 2020

முதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்

By 0 682 Views

நிவர் புயலின் தாக்கம் சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது.

இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்க… அரசின் உதவிகளை எதிர் பார்த்துக் கொண்டிராமல் தன் சொந்த செலவிலேயே உதவிகளைச் செய்து களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர்.

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை கொடுப்பதும் மட்டு மல்லாமல் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து அதற்கு தீர்வு காண்கிறார்.

இந்த விஷயம் முதலமைச்சரின் பார்வைக்கு  சென்றிருக்கிறது.

இதையடுத்து உடனடியாக அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இவரது செயலை பலரும் அறிய வேண்டும் என்பதற்காக பொதுவெளியில் அதாவது முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த அமைச்சர் ஜெயக்குமார்தான். முதல்வர் பாராட்டிய டிவீட் கீழே…

CM's tweet

CM’s tweet