July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Classic Layout

இந்தி அந்தாதுன் தமிழில் பிரஷாந்த் நடிக்க தயாராகிறது

by on August 16, 2019 0

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்தது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான...

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை

by on August 16, 2019 0

ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்...

ஜப்பானில் படமான சுமோ வெளியீடு பற்றிய அறிவிப்பு

by on August 15, 2019 0

எஸ்பி ஹோசிமின் இயக்கியிருக்கும் இந்தோ-ஜப்பானிய படமான ‘சுமோ’, சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும். ஜப்பானில் பாடல் காட்சிகளையும், படபிடிப்பையும் நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படப்பிடிப்பு அங்கே வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் ஹோசிமின். அதற்கு உந்து சக்தியாக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தைத்...

இந்திய ராணுவத்தை வலிமையாக்க முப்படைகளுக்கும் ஒரே தலைவர் – மோடி

by on August 15, 2019 0

இந்தியாவின் 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (15-08-2019), தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர், பிரதமர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள்,...

நானறிந்த நா முத்துக்குமார் – சிறப்புக் கட்டுரை

by on August 14, 2019 0

என்னை அன்புடன் “அண்ணே…” என்றழைத்த நா.முத்துக்குமாரை நாமிழந்த மூன்றாவது நினைவு தினமின்று. (ஆகஸ்டு 14) காலம் கார்கால மேகம் போல வேகத்துடன் கடந்துகொண்டேதான் இருக்கிறது. முதல் முதலில் நான் முத்துக்குமாரை சந்தித்தது (நாம் தமிழர்) சீமானின் வீட்டில். நான் அப்போது தினமணி நாளிதழில் எழுதிக் கொண்டிருந்தேன். என்னை சீமான் “ஐயா…” என்று அழைக்க நானும்...

தன்னை நீக்கிய மாநாடு தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி

by on August 14, 2019 0

நடித்து நல்ல பெயர் எடுக்கிறாரோ இல்லையோ, வம்பு வளர்த்தே பெயரெடுப்பதில் சிம்புவுக்கு நிகர் சிம்புதான் – இல்லையென்றால் சிம்புவுக்கு நிகர் ‘எஸ்டிஆர்’தான் எனலாம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அவருக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக வாகுறுதி தந்து அந்தப்படத்துக்கு இயக்குநராக வெங்கட்பிரபுவை ஒப்பந்தம் செய்ய வைத்து, படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்தார்கள். கிட்டத்தட்ட...