சினிமாவைப் பொறுத்தளவில் எல்லாமே ஹீரோதான் என்ற நிலைதான் இன்றும், அன்றும். ‘அப்படி இல்லை’ என்பதை அந்த ஹீரோவே சொன்னால்தான் உண்டு. ஆனால், அவர்களும் அப்படிச் சொல்லாமல் எல்லாப்புகழையும் தாங்களே அறுவடை செய்துகொண்டு போகிறார்கள். இவர்களுள் வித்தியாசமான ஹீரோ விஜய் ஆண்டனி. அவரே நடித்து இசைமைத்திருக்கும் படமான ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் “இயக்குநர்தான்...
‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று காற்று வழியே செய்தி வந்திருக்கிறது. அவர் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருக்கும் இரண்டு காட்சிகளுமே அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக...
விஜய் தம்பி விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்துக்கு விருப்பப்பட்டு திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. இது விக்ராந்த் நடிக்கவிருக்கும் படத்துக்காக என்பது கூடுதல் தகவல். இவர் தற்போது ‘வெண்ணிலா கபடி குழு 2’, ‘சுட்டு பிடிக்க உத்தரவு’, ‘பக்ரீத்’ என பல படங்களில் நடித்து வருகிறார்....
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆன்ட்ரியா நடித்து கடந்த அக்டோபர் 17-ம்தேதி வெளியான வடசென்னை படத்துக்கு மீனவ சமுதாய மக்கள் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள் விடப்பட்டன. அதில் முக்கியமானது அமீர், ஆன்ட்ரியா இடம் பெற்றுள்ள முதலிரவுக் காட்சி. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சில ஆபாச வசனங்களும் தங்கள் மனத்தைப் புண்படுத்துவதாக...
கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை இன்று மாலை சூர்யா வெளியிட்டார். இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸின் எஸ்.லக்ஷ்மண் இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘தேவ்’ படத்தைப் பற்றி இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கூறியது கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த...
’60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வேல.ராமமூர்த்தி,...