சவுதி அரேபியாவில் அப்துல்லா அல் ஜவுபான் என்பவரது ஆண் குழந்தை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி மாதிரிகளை எடுக்கப் பயன்படும் குச்சியை குழந்தையின் மூக்கில் விடும்போது அது உடைந்துள்ளது.குச்சியை எடுக்க டாக்டர்கள் மயக்க மருந்து செலுத்தினர்.
ஆனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை சுயநினைவை இழந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும் என அப்துல்லா வலியுறுத்தியபோது, சிறப்பு டாக்டர் விடுப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதை உணர்ந்த அப்துல்லா, குழந்தையை வேறு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோரியுள்ளார்.
அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வர தாமதமாகியுள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.