மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு திருப்பதி கோவிலைக் கையகப்படுத்தத் திட்டம் வகுப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
“கோவிலைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. அந்தத் திட்டம் நிறைவேறாது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதித் திட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம்.
திருப்பதி பாலாஜியின் அருளால்தான் 2003-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரமான தாக்குதலில் உயிர் பிழைத்தேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க எக்காரனம் கொண்டும் அனுமதிக்கமாட்டேன்..!” என்றார் அவர்.
மேலும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டுக்கு டெல்லிக்கு சென்றதாகவும், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு நிதி கேட்டதற்கு வழங்காமல் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.