ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.
இதன் விபரம்…
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், 2006-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கான அனுமதியை முறையாகப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அத்துடன் இந்த அனுமதியைப் பெற சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை இதில் விசாரணையை மேற்கொண்டுள்ளன.
இந்த வழக்கில் இன்று ப.சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. “சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே என் மீதும், மதிப்புமிக்க அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது…” என்று இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் செய்தி கீழே…