November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

திரெளபதி திரைப்பட விமர்சனம்

by by Feb 29, 2020 0

வட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார்.

மனைவி ‘திரெளபதி’யையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகும் நாயகன் ரிச்சர்ட். பிணையில் வெளியில் வந்து அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தி மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றுவதுதான் படம்.

பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் ரிச்சர்டுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் படம் இது . அன்பு கொண்ட கணவராகவும்,…

Read More

கல்தா திரைப்பட விமர்சனம்

by by Feb 27, 2020 0

கலைப் படைப்பின் முக்கிய நோக்கமே சமுதாய பிரச்சனைகளை சரியானபடி சொல்லி அதற்கான தீர்வுகளை தேடுவதுதான். ஆனால் இன்றைக்கு எடுக்கப்படும் படங்கள் அப்படி இருக்கின்றனவா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

கோடிகளைக் கொட்டி உச்ச நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் சமுதாயப் பொறுப்புணர்வு உள்ள கருத்துக்களை சொல்கின்றனவா என்பதும் ஆச்சரியக்குறி தான்.

இந்நிலையில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சமுதாயத்தின் முக்கியமாக தமிழ்நாட்டு எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்கள் அன்றாடம் படும் அல்லல்களை சொல்கிறது அந்த வகையில் இந்த படம்…

Read More

காட்ஃபாதர் திரைப்பட விமர்சனம்

by by Feb 24, 2020 0

பொதுவாக காட் ஃபாதர் என்றால் ஆங்கிலத்தில் இருக்கும் பொருளே வேறு. ஆனால், கொச்சையாக இரு குழந்தைகளுக்குக் காவல் தெய்வங்களாக அவர்களது தந்தைகளே நிற்க அதுதான் காட்ஃபாதர் என்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.

எடுத்துக்கொண்ட  பிரச்சினை இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கிறது. கொடூர வில்லனான ‘லால்’, தனக்கு எதிராக செயல்படுபவர்களை ஈவு இரக்கமில்லாமல் போட்டுத்தள்ளிவிடும் போக்குடையவர். காலம் கடந்து பிறந்த அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை ஒன்று வர, மாற்று இதயம் பொருத்துவதுதான் வழி…

Read More

மாஃபியா திரைப்பட விமர்சனம்

by by Feb 23, 2020 0

ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன இயக்குநர் கார்த்திக் நரேனின் இரண்டாவது (வெளியாகும்) படமாக ஆனதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் வழக்கமான முறையில் இல்லாமல் முன்பின்னான திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக் நரேன்.

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக வரும் அருண்விஜய்யின் மிடுக்கும், அவருக்கான கெட் அப்பும் அபாரமாக இருக்கிறது. அவரும் அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பாத்திரத்தை உள்வாங்கி நடிக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

அவர் மேற்கொண்ட பணியில் தொடர்ந்து பின்னடைவு…

Read More

மீண்டும் ஒரு மரியாதை திரைப்பட விமர்சனம்

by by Feb 23, 2020 0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்முறையாக இயக்கும் வாய்ப்பு பாரதிராஜாவுக்குக் கிடைத்த போது சிவாஜி கணேசன் வயோதிகத்தின் தொடக்கத்தில் இருந்தார். எனவே அவரை வைத்து வழக்கமான காதல் கதையைப் புனைய முடியாத பாரதிராஜா, வாழ்ந்து முடித்த ஒரு மனிதன் மீது வாழத் தொடங்கிய பெண்ணொருத்தி கொண்ட காதலை ‘முதல் மரியாதை’யாகக் கொடுத்தார்.

அப்போதே அதைக் காதல் என்று சொல்ல அவருக்கே தயக்கமாக இருக்க, அது காதலுக்கும் மேலான புனிதம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், படம் அந்த நியாயத்தைத்…

Read More

கன்னி மாடம் திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2020 0

நல்ல திரைக்கதைக்கு உதாரணம் முதல் காட்சி நம்மை நிமிர்ந்து உட்காரவும், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்துக்குள் கதை பயணிக்கும் திசையை நாம் இனம் கண்டுகொள்ளவும் வேண்டும். அந்த வகையில் நடிகர் வெங்கட் போஸ் இயக்குநராகியிருக்கும் இந்தப்படம் முதல் காட்சியிலேயே கவர்கிறது.
 
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் கொலையாளியாக போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருக்க, அவர் ஏன், யாரை கொலை செய்தார் என்பது பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது.
 
அதில் வரும் முதல் காட்சியில் சென்னைக்கு அதிகாலையில் வந்திறங்கும் விஷ்ணு, சாயாதேவி ஜோடியும் அவர்களது கலக்கமும்…

Read More

ஓ மை கடவுளே திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2020 0

வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும்போது “ஓ மை காட்…” என்று எரிச்சலடைவோம் இல்லையா..? அப்போது அந்தக் கடவுள் நேரே வந்து “என்ன உன் பிரச்சினை..?” என்று அதைத் தீர்த்து வைக்க முயன்றால் என்ன ஆகும்..? என்ற சுவாரஸ்யமான ஃபேன்டஸி வித் ரோம் காம் ஜேனர் படம்தான் இது.
 
நாயகன் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷாரா மூவரும் நண்பர்கள். அசோக் செல்வன் அரியரில் இஞ்சினீயரிங் முடித்தவர். இந்நிலையில் ரித்திகாவுக்கு அவரது அப்பா எம்.எஸ்.பாஸ்கர் மாப்பிள்ளை பார்க்க, ரித்திகாவுக்கோ…

Read More

சீறு திரைப்பட விமர்சனம்

by by Feb 8, 2020 0

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை எதிர்க்கும் மனத் திண்மையை பெண்களுக்கு ஏற்படுத்த ஆண்கள் உறுதி ஏற்று பாரதி சொன்னது போல் ‘சீற’ வலியுத்துகிறது படத்தின் கதை.

மாயவரம் பகுதியில் லோக்கல் டிவி நடத்திக்கொண்டு அன்பான தங்கையுடன் வாழ்ந்து வரும் ஜீவாவுக்கு பெண்களின் அபயக் குரல் எங்காவது கேட்டால் போதும். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சீறி எழுந்து வந்து சினம் கொண்டு புரட்டி எடுத்து விடுவார். அப்படித்தான் தொடங்குகிறது கதை….

Read More

டகால்டி திரைப்பட விமர்சனம்

by by Feb 1, 2020 0

ஒரு படம், ஒற்றே படம் சந்தானத்தை முதல் நிலை கமர்ஷியல் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை ரஜினி, விஜய், அஜித் படங்களைக் குலுக்கிப்போட்டு அதில் நாம் கண்டு ரசித்திருக்கும் காட்சிகளை அப்படியே அலேக்கி ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த்.

அதில் கில்லி, போக்கிரி தொடங்கி அதிசயப்பிறவி வரை படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு இந்திய நிலமெங்கும் டிராவல் அடிக்கிற ஆக்ஷன் லைன் எனும்போது தனியாகக்…

Read More

உற்றான் திரைப்பட விமர்சனம்

by by Jan 31, 2020 0

படிக்கிற வயதில் படிக்காமல், இன்ன பிற வேலைகள் எல்லாம் செய்தால் என்ன ஆகும் என்று சொல்ல வந்திருக்கும் இன்னொரு படம். அதை ஒரு முன்னணி கமர்ஷியல் ஹீரோவுக்குரிய திரைக்கதை உத்தியான சண்டை, பாட்டு, சண்டை, பாட்டு என்று அடுக்கி ஒரு உணர்ச்சி மயமான கிளைமாக்ஸ் வைத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஓ.ராஜா கஜினி.

ஆனால், இதில் நடித்திருப்பதோ புதுமுகம் ரோஷன் சுபாஷ். ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான திரைக்கதைக்கு ஒரு புதுமுகம் தாங்கியிருப்பதே பெரிய விஷயம். அந்த வகையில் ரோஷன்…

Read More