ரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா இதைப் படியுங்க
சகாயம் ஐஏஎஸ் உடன் விஜய் இணைய வாய்ப்பில்லை – எஸ் ஏ சி
காஞ்சிபுரத்தில் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்…” என்றார்.
“நாட்டைக்…
Read More
ரஜினியை இலங்கைக்கு அழைத்த முன்னாள் முதல்-மந்திரி
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் இல்லையோ ஆனால் அவர் அரசியலுக்குள் இருப்பது உறுதியான விஷயம்.
Thamizharkal எந்த நாட்டு அமைச்சர்களோ முதலமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வரும்போது ரஜினியை பார்ப்பது என்பது ஒரு வாடிக்கையான செயலாகி விட்டது.
அப்படி தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.
அப்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து ரஜினியிடம் அவர் விளக்கமளித்தார்.
அத்துடன் ரஜினியை இலங்கைக்கு…
Read More
தர்பார் சசிகலா தொடர்பான வசனம் நீக்காவிட்டால் வழக்கு
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் ரஜினி கமல் வேண்டவே வேண்டாமாம்
நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது
அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக இடித்து தள்ளினர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையறிந்த நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார்.
அவருடைய ஆசிரமம் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமான நில ஆக்ரமிப்பில் கட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
விரைவில் ஜியோ மார்ட் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்
விரைவில் துவங்குகிறது “ஜியோ மார்ட்” நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்!*
வால்மார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கும் வகையிலான சூப்பர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்களை துவக்க உள்ளது.
“நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட், தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யான்…
Read More
கடும் குளிர் காரணமாக டெல்லியில் ரெட் அலர்ட்
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை புத்தாண்டு வரை தொடரும் எனவும் கூறியுள்ளது.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான ஓடு பாதையில் 50 மீட்டர் முதல் 175 மீட்டர் வரை மட்டும் வெளிச்சம்…
Read More
தற்கொலை செய்து கொண்டது என் கணவர் இல்லை – டிவி நடிகை ரேகா பரபரப்பு
சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ஒரு ரேகாவின் கணவர் கோபிநாத் என்பவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக கிறிஸ்துமஸ் அன்று அண்ணாநகரில் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நேற்று காலை வேகமாக பரவியது.
இது ஒருபக்கம் இருக்க, கோபிநாத்தின் மனைவியாக வேறு ரேகாவின் புகைப்படம் சில மீடியாக்களில் வர, அதைப் பார்த்து பலர் அந்த ரேகாவிடம் துக்கம்…
Read More
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்(90) நேற்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மோகன் உயிர் பிரிந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991-ல் மோகன் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read More