October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கடவுளை கேலி செய்வதே புரட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்” – ‘கலன்’ பட விழாவில் அர்ஜுன் சம்பத்

by by Oct 20, 2024 0

ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். குருமூர்த்தி மற்றும்…

Read More

ஆலன் திரைப்பட விமர்சனம்

by by Oct 19, 2024 0

ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொரு விதமானது. அதில் சிலரது வாழ்க்கைப் பயணம் வினோதங்கள் நிறைந்தது. அப்படி தியாகு என்ற மனிதனின் வாழ்க்கை வினோதங்களை நமக்குக் கடத்துகிறார் இயக்குனர் ஆர்.சிவா. 

சந்தோஷமான மலை கிராமத்து வாழ்க்கையில் சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து விடும் தியாகு சென்னையில் ஒரு மேன்ஷன் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறார். அங்கே இருக்கப் பிடிக்காமல் வாழ்வில் அமைதி தேடி காசிக்கு செல்கிறார்.

அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், வாழ்க்கையின் அனுபவங்களை மற்றவர்…

Read More

கவினுக்கு 20 ரூபாய் பிச்சை போட்ட இளம்பெண் – பிளடி பெக்கர் விளைவு

by by Oct 18, 2024 0

நெல்சன் திலீப்குமாரை ஒரு முன்னணி இயக்குனராக மட்டும்தான் நமக்குத் தெரியும் அல்லவா..?  ஆனால் அவர் இப்போது கவின் நடிக்க சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘பிளடி பெக்கர்’ (Bloody Begger) என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். 

Filament Pictures சார்பாக நெல்சன் திலிப் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 

ஜென் மார்டின் இசையமைக்க, சுஜிதா சாரங்  ஒளிப்பதிவு செய்யும் படத்தின் படத்தொகுப்பை ஆர்.நிர்மல் கவனிக்கிறார்.

எதிர்வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் பிளடி…

Read More

சார் திரைப்பட விமர்சனம்

by by Oct 17, 2024 0

சினிமாவுக்கு வாத்தியார் பெருமை சேர்த்தது ஒரு காலம். இது வாத்தியார்களைப் பெருமைப்படுத்தும் சினிமாப் படம்.

எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற அடிப்படையில் கிராமப்புறங்களில் பணி புரியும் வாத்தியார்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

அத்துடன் கல்வி போதித்து அறியாமையைப் போக்குவது என்பது ஒரு தலைமுறையில் சாத்தியப்படக்கக்கூடிய விஷயம் அல்ல என்பதையும் மூன்று தலைமுறைக் கதை களாகச் சொல்லி ஆழமாக உணர்த்தியும் இருக்கிறார்.

ஆண்டான்களின் அடிமைகளாக இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை…

Read More

ஆர்யமாலா திரைப்பட விமர்சனம்

by by Oct 16, 2024 0

சினிமா வரலாற்றில் இயக்குனர் யார் என்பது தெரியாமலேயே வெளிவந்திருக்கும் படம் இது. அதற்குக் காரணம் அவர் பாதியிலேயே இந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம்.

அந்தக் கதை என்னவென்று நமக்குத் தெரியாது. எனவே, படத்தின் கதையைப் பார்க்கலாம்.

இதுவும் ஒரு காதல் கதைதான், ஆனால், வழக்கமான காதல் கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டது. காதலுக்கு வித்தியாசமான வில்லனாக இதில் காதலி பருவமடையாத விஷயத்தை வைத்திருக்கிறார் அந்தப் பெயர் தெரியாத இயக்குனர்.

அதாவது நாயகி மனிஷா ஜித் பருவமடையாமலேயே இருக்கிறார். அவர் தங்கையே ஒரு…

Read More

பிளாக் திரைப்பட விமர்சனம்

by by Oct 12, 2024 0

60 வருடங்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு அருகில் வருவதால் நிகழும் ‘சூப்பர் மூன்’ என்கிற இயற்கை அதிசயத்தையும், நவீன அறிவியலின் இயற்பியல் தத்துவங்களையும் வைத்து ஒரு சிக்கலான கதையை எழுதி, அதை சுலபமாகப் புரியவும், சுவாரசியமாகத் தரவும் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி.

1964 ஆம் வருடம் ஒரு சூப்பர் மூன் நிகழ்வு நடக்க, அப்போது விவேக் பிரசன்னாவைச சுற்றி ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இப்போது இந்த 2024 ஆம் வருடம் அதேபோன்ற ஒரு சூப்பர்…

Read More

வேட்டையன் திரைப்பட விமர்சனம்

by by Oct 10, 2024 0

இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலும், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிலிருந்துதான் கதை தொடங்குகிறது. மூத்த வழக்கறிஞராக இருக்கும் அவர் பதவியேற்கவிருக்கும் காவல்துறையினருக்குப் பாடம் எடுப்பதில் இருந்து படமும் ஆரம்பிக்கிறது.

அதற்குப் பின் வழக்கமான பீடிகைகளுடன் ரஜினிகாந்தின் அறிமுகம் நிகழ்கிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் அவர் அறிமுகமாகும் போதே துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி பொட்டு பொட்டென்று சுட்டுக் கொண்டே வருகிறார். 

ஒரு பக்கம் வழக்கை ஆராய்ந்து உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதே சட்டத்தைக் காப்பாற்றும்…

Read More

என்னைப் பெருந்தன்மையாக இருக்கச் சொன்னார் அண்ணன் சூர்யா – கார்த்தி பெருமிதம்

by by Oct 6, 2024 0

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார்.

படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து…

Read More

உலகுக்குத் தேவை அன்புதான் வன்முறை அல்ல – ஆலன் இசை வெளியீட்டு விழாவில்…

by by Oct 5, 2024 0

*நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு…

Read More

ஆரகன் திரைப்பட விமர்சனம்

by by Oct 5, 2024 0

மூன்றே முக்கிய கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒன்றே முக்கால் மணி நேரப் படத்தை அலுப்பில்லாமல் கொண்டு செல்ல முடியுமா..? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அருண் கே.ஆர்.

இதற்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனர்தான்.

நாயகி கவிப்ரியாவை தொடர்ந்து வந்து காதலிக்க சொல்லிக் கேட்கிறார் ஹீரோ மைக்கேல் தங்கதுரை. ஆதரவில்லாத கவிப்ரியாவும் தங்கதுரையின் அன்பில் மயங்கி அவரைக் காதலிக்க ஆரம்பிக்க, கவிப்ரியாவுக்கு பெரிய சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது – அது வயதான ஒரு பெண்மணியைப்…

Read More