October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும் பான் இந்திய படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது !

by by Jul 7, 2025 0

*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், இணையும், பான் இந்தியா திரைப்படத்த்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது !!*

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதன் முறையாக இணையும் பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது.

இந்த மிக பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து…

Read More

1991ல் நடந்த உண்மைக் கதைதான் ப்ரீடம்..! – சசிகுமார்

by by Jul 7, 2025 0

“ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

Read More

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

by by Jul 6, 2025 0

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ்,…

Read More

‘ ட்ரீம் நைட் ஸ்டோரீஸ்’ பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

by by Jul 6, 2025 0

புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான “புரொடக்‌ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது.

Read More

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது..!

by by Jul 5, 2025 0

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். 

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன்…

Read More

டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கி இருக்கிறேன்..! – மனம் திறந்த விக்ரம் பிரபு

by by Jul 4, 2025 0

*ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு*

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி…

Read More

பறந்து போ திரைப்பட விமர்சனம்

by by Jul 4, 2025 0

முட்டைகளை அடைகாத்தாலும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை ‘ பறந்து போ… உன் பாதையை நீயே தேடு..!’ என்றுதான் விட்டு விடுகிறது பறவை. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்தி வாழ்நாள் முழுதும் அடைகாத்துக் கொண்டே இருக்கிறான்.

இந்த தத்துவார்த்தமான விஷயத்தை இது ஒரு தத்துவம் என்று தெரியாமலேயே போகிற போக்கில் ஜாலியாக ஜோக் அடித்து, பாட்டு பாடிக் கொண்டே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ராம். 

சொல்லப்போனால் அவரது படங்களிலேயே இந்தப் படம்தான் எளிதாகக் கைக்கொள்ளக்…

Read More

பீனிக்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Jul 4, 2025 0

தீயிலிட்டு சாம்பலாக்கினாலும் அதிலிருந்து உயிர் பெற்று வரும் புராணகாலப் பறவையாக நம்பப்படுவது பீனிக்ஸ். 

அப்படி நசுக்க நசுக்க அதிலிருந்து உயிர்த்துக் கிளம்பும் ஒடுக்கப்பட்ட பிறவியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி. 

கதையின் களம் நாம் நன்கறிந்த வடசென்னைப் பகுதிதான். அதிலும் குத்துச்சண்டை பின்னணியை இன்னும் சில படங்களில் பார்த்திருக்கிறோம்.

எனவே விஜய் சேதுபதியின் பதின்வயது  மகன் இதில் நாயகனாக அறிமுகமாகிறார் என்கிற ஆச்சரியத்தைத்தவிர வேறு எந்த முக்கியத்துவமும் படத்துக்கு முந்தைய எதிர்பார்ப்பில் இல்லை.

ஆனால் இதெல்லாம் படத்தைப் பார்த்த பின்பு…

Read More

லவ் மேரேஜ் திரைப்பட விமர்சனம்

by by Jun 27, 2025 0

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, அந்தத் திருமணம் மண்ணில்தான் நடக்கிறது.

அப்படி நடக்கக்கூடிய திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்களுக்காகவோ  சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான் உண்மையான காதல் என்று புரிய வைக்கும் படம்.

அதை ஒரு ஃபீல் குட்  படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷண்முகப்பிரியன் 

பெரும்பாலும் அடிதடி ஆக்சன் படங்களிலேயே பார்த்து பழக்கப்பட்டு விட்ட விக்ரம் பிரபுவுக்கு…

Read More

மார்கன் திரைப்பட விமர்சனம்

by by Jun 27, 2025 0

சென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண்.

இது இந்தியாவெங்கும் வைரலாக…, மும்பையிலும் எதிரொலிக்கிறது. அங்கே தன் மகளும் அதே விதத்தில் இறந்த சோகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி அது ஒரு சீரியல் கில்லரின் வேலைதான் என்று பொறி தட்டி சென்னை புறப்படுகிறார்.

சென்னையில் ஏடிஜிபி யாக இருக்கும் சமுத்திரக்கனி அந்தக் கேசை அவரிடம் ஒப்படைக்க… அவர் சந்தேகப்படும்…

Read More