April 28, 2024
  • April 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த தமிழரசன்

by by Jun 27, 2023 0

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம்
ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான…

Read More

பம்பர் படத்தில் முதன் முதலாக நடனம் ஆடுகிறேன் – நடிகர் வெற்றி

by by Jun 26, 2023 0

“பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’.

ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர்…

Read More

தலைநகரம் முதல் பாகத்தை விட 2வது பாகம் நன்றாக உள்ளது என்கிறார்கள் – VZ துரை

by by Jun 26, 2023 0

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர்…

Read More

பாயும் ஒளி நீ எனக்கு திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

பாரதியின் வரிகள் பவர்ஃபுல்லானவை என்றாலும்… இந்த படத்துக்கு இந்த தலைப்பு பக்காவாக பொருந்துகிறது என்றாலும்… இத்தனை நீளமான தலைப்பை எழுத முடியாமல் போஸ்டரிலேயே சுருக்கி சுருக்கி எழுதி இருப்பதிலேயே தம் கட்டி இருக்கிறார்கள்.

இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் – இப்படி நீளமான தலைப்புகளை வைப்பதில் இருக்கும் சிரமத்தை. இதையும் படித்து புரிந்து கொண்டு தியேட்டருக்குள் வருபவர்களையாவது படம் திருப்திப் படுத்துகிறதா என்று பார்க்கலாம்.

முழுக்க பார்வைத் திறன் இல்லாத நாயகர்களை சார்லி சாப்ளின் காலத்தில் இருந்தே பார்த்து விட்டதாலோ…

Read More

அழகிய கண்ணே திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

இதுவரை வந்த சாதியக் காதல் சொல்லும் படங்களில் ஒரு பக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், இன்னொரு பக்கத்தில் வேறுபட்ட சாதியினரும் இருந்திருக்கிறார்கள். அந்த இன்னொரு பக்க சாதியினர் பிராமணர்களாக அதிகம் இருந்ததில்லை.

அப்படி இருந்த படங்களிலும் பிராமணர்கள் அமைதியான போக்கை மேற்கொள்பவர்களாகவும், எதிர்தரப்பு சாதியினர் மட்டுமே வன்முறை மிகுந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில்தான் முதல்முறையாக தங்கள் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போன இன்னொரு சாதியைச் சேர்ந்த ஆணை பிராமண சமூகத்தினர் வன்முறைப் பாதையில் கொலை செய்யும் அளவுக்குப்…

Read More

நாயாடி திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

இதுவும் ஒரு திரில்லர் ஹாரர் வகையறா படம்தான். இப்போதைய ட்ரெண்டின் படியே இந்த படத்துக்கும் ஒரு முன்னோட்டக் கதை சொல்லப்படுகிறது.

அரசர் காலத்தில் சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்ததாகவும், அந்தக் கடைசிப் பிரிவில் இருப்பவர்கள் பிற மூன்று சமூகத்தினருக்கு எடுபிடிகள் ஆகவும் ஏவலாட்களாகவும் அடிமைகளாகவும் நடத்தப்பட்டதாகவும் அவர்களே நாயாடி என்ற பிரிவைப் சேர்ந்தவர்களாகவும் சொல்லப்படுகிறது.

சமூகத்தில் தங்களுக்கு என்று எந்த பாதுகாப்பும் இல்லாத சூழலில் அவர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தைப் படைத்து அந்தத் தெய்வத்துக்கு பலிகள் கொடுத்து வருகின்றனர்.

ஒரு…

Read More

ரெஜினா திரைப்பட விமர்சனம்

by by Jun 23, 2023 0

நல்ல கதை ஹீரோவாக இருக்கும்போது அந்தப் படத்துக்கு ஒரு முன்னணி ஹீரோ தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் ஹீரோக்களைத் தேடி ஓட மாட்டார்கள் என்பது ஒரு சினிமா சித்தாந்தம்.

அப்படி நாயகியை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மேற்கூறிய கூற்றை மெய்ப்பிக்கிறதா என்று பார்க்கலாம்.

சமுதாயத்திற்கென்றே உழைப்பவர்கள் கண்டிப்பாக சொந்த வாழ்க்கைக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள். அப்படி சமுதாயப் போராளியான ஒருவர், தன் 10 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வர அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு மரணம்…

Read More

தண்டட்டி திரைப்பட விமர்சனம்

by by Jun 23, 2023 0

“அழுத்தித் தேயுடா விளக்கெண்ண… அவனுக்கு வலிச்சா உனக்கென்ன..?” என்கிற கதையாக சுயநலம் பிடித்த கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் நடக்கிறது இந்தப் படத்தின் கதை.

போலீஸ் என்றாலே இந்தக் கிராமத்துக்கும் கிடாரிப்பட்டி என்றாலே போலீசுக்கும் ஒவ்வாமை என்பதை ஓப்பனிங்கிலேயே சொல்லிவிடுகிறார்கள்.

அந்த கிராமத்தில் வாழ்ந்த பாம்பட மூதாட்டி ஒருவர் பாவம் பட்டுத் தொலைந்து போக, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு விரைவில் ஓய்வு பெறவிருக்கும் காவலர் சுப்பிரமணியிடம் வந்து சேருகிறது.

அவரும் லேசுப்பட்ட ஆள் இல்லை. வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள்ளும்,…

Read More

பானி பூரி வெப் சீரிஸ் விமர்சனம்

by by Jun 21, 2023 0

ஹீரோ ஹீரோயின்களின் பெயர்களிலிருந்து அந்த படைப்பின் தலைப்பைப் பிடிப்பது வழக்கமாக இருக்கும் ஒரு யுக்திதான் ஆனால் இத்தனை இளமையாக – புதுமையாக ஒரு தலைப்பை பிடிக்க முடியும் என்பதுடன் இயல்பான கதை ஓட்டத்துடன் ஒரு அழகான காதலையும் சொல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

அப்பாவின் பெயரான தண்டபாணியை தன் பெயரில் கொண்டிருப்பதால் நாயகன் லிங்கா பாணி ஆகிறார். பூர்ணிமா என்ற பெயர் கொண்டதால் நாயகி சம்பிகா பூரி ஆகிறார்.

இருவருக்கும் காதல் ஓடிக்…

Read More

அஸ்வின்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Jun 20, 2023 0

சில படங்கள் சிலரால் எதிர்பார்க்கப்படும். அந்த சிலர் நடிகராகவோ இயக்குனராகவோ இசையமைப்பாளராகவோ இருக்கக்கூடும். அப்படி உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் தன்னுடைய வித்தியாசமான தேடலால் வசந்த் ரவியின் படங்கள் எதிர்பார்க்க வைக்கின்றன.

அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது அஸ்வின்ஸ் . அவரும் இயக்குனர் தருண் தேஜாவும் கைகோர்த்து மிரட்டி இருக்கும் படம்தான் இது.

ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் புனை கதைக்கும், இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இடைவேளை வரை புரியாது. அதற்குப்பின் கவனித்தால் எல்லா விஷயங்களுக்கும்…

Read More