October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பணத்துக்காக நான் எந்தப் படத்தையும் செய்ததில்லை – சுந்தர்.சி

by by Mar 31, 2024 0

சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  !

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை 4’….

Read More

பூமர் அங்கிள் திரைப்பட விமர்சனம்

by by Mar 30, 2024 0

படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார் என்றதும் அவர்தான் பூமர் அங்கிளாக நடிக்கப் போகிறார் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

முதலில் பூமர் அங்கிள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் போன்றவர்களைப் போலவே இந்தியாவில் சக்திமான் என்று ஒரு சூப்பர் ஹீரோ இருந்தார் இல்லையா..? அவர்தான் இப்போது வயதாகி பூமர் அங்கிள் ஆகிவிட்டார்.

அந்த வேடத்தில் நடிப்பவர் எம்.எஸ்.பாஸ்கர் ஆனால், இந்தக் கதையை…

Read More

ராமராஜன் இருக்கார்… பாட்டு எங்கேய்யா ?”- கோபப்பட்ட இளையராஜா

by by Mar 30, 2024 0

நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார்.

அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்

தம்பிக்கோட்டை, மறைந்திருந்து…

Read More

அழகி-2 க்காக நான் காத்திருக்கிறேன் – பார்த்திபன்

by by Mar 30, 2024 0

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29)…

Read More

என்னைக் கூடுதல் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ – விஜய் தேவரகொண்டா

by by Mar 30, 2024 0

*விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘ தி ஃபேமிலி ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார்.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி…

Read More

ஆன்ட்ரியா நடித்த கா படத்தை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம்

by by Mar 28, 2024 0

நடிகை ஆன்ட்ரியா நடித்துளள கா – தி ஃபாரஸ்ட் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகை ஆன்ட்ரியா நடிப்பில், இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ள கா – தி ஃபாரஸ்ட் படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என எய்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கா –…

Read More

நேற்று இந்த நேரம் திரைப்பட விமர்சனம்

by by Mar 28, 2024 0

ஷாரிக் ஹசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட விஸ் காம் முடித்த இளைஞர் குழு ஒன்று ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது.

சென்ற இடத்தில் ஷாரிக்கைக் காணவில்லை என்று அரவிந்த் போலீசுக்கு சொல்ல, விசாரணை வளையத்துக்குள் வருகிறது இளைஞர்கள் குழு.

தொடர் விசாரணையில் ஷாரிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு இன்ஸ்பெக்டர் வர, இறுதி நாள் விசாரணையின் போது புகார் கொடுத்த அரவிந்தையும் காணவில்லை. இப்படியாக போகிற மர்டர் மிஸ்டரி கதை…

Read More

வெப்பம் குளிர் மழை திரைப்படம் விமர்சனம்

by by Mar 28, 2024 0

பூமி நீர் வெப்பத்தால் மேகமாகிறது. பின் அது குளிர்ந்து மழையாகிறது. இந்த இயற்கையின் தத்துவத்தை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ஒரு உணர்வுமயமான கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து.

பொதுவாகவே ஒரு படத்தின் தயாரிப்பாளரைதான் அந்தப் படத்தின் ஹீரோ எனலாம். காரணம் தயாரிப்பாளர் இல்லை என்றால் அந்தப் படமே இல்லை.

ஆனால், இந்தப் படத்தில் தயாரிப்பாளர் திரவ் , உண்மையிலேயே படத்துக்கு ஹீரோவாகவும் ஆகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாடல்களை எழுதி, படத்தை எடிட் செய்து, ஒலிக்கலவையில் பங்கெடுத்து……

Read More

Godzilla x Kong : The New Empire ஆங்கிலப் பட விமர்சனம்

by by Mar 27, 2024 0

இது 2021 ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா vs காங் படத்தின் தொடர்ச்சியாகும்.

அத்துடன் காட்ஸில்லா வரிசையில் 38வது படமாகவும், கிங் காங் வரிசையின் 13வது படமாகவும் அமைகிறது.!

ஆடம் விங்கார்ட் இயக்கியுள்ள இந்த படத்தில் காட்ஸில்லா மற்றும் காங் ஒரு மர்மமான ஹாலோ எர்த் அச்சுறுத்தலுக்கு எதிராக இணைகிறார்கள்,

அந்த ஹலோ எர்த்துக்கு நாயகி ரெபக்கா ஹால் மற்றும் குழுவினர் பயணம் செய்யும் வேளையில் டைட்டன்ஸ் மற்றும் ஸ்கல்…

Read More

இடி மின்னல் காதல் திரைப்பட விமர்சனம்

by by Mar 27, 2024 0

நூற்றாண்டு கால சினிமாவில் இதுவரை ஒரு சேட்டிடம் கடன் பட்டவர்கள்தான் அவதிப்படுவதாக கதைகள் வந்திருக்கின்றன. முதல்முறையாக இந்தக் கதையில் ஒரு சேட், ரவுடியிடம் கடன் வாங்கி, படாத பாட்டு செத்துப் போகிறார். அவருடைய வாரிசு படும் பாடுதான் கதை.

சில நாட்களில் அமெரிக்கா செல்லவிருக்கும் நாயகன், சிபி தன் காதலி பாவ்யா ட்ரிக்காவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அசந்தர்ப்பமாக ஒருவர் மீது காரை ஏற்றி விடுகிறார். அதில் அந்த மனிதர் இறந்து போக இருவரும் பதற்றம்…

Read More