September 1, 2025
  • September 1, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

அறம் செய் திரைப்பட விமர்சனம்

by by Mar 27, 2025 0

‘மக்களுக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல… அரசியல் மாற்றம்..!’ என்கிற வலுவான விஷயத்தை நீட்டி முழக்கி நிமிர்ந்து குனிந்து வளைந்து படுத்தெல்லாம் சொல்லி இருக்கும் படம்.

பெண்ணியவாதியான அஞ்சனா கீர்த்தி, தன்னுடன் ஒரு செம்படையைத் தயார் செய்து கொண்டு அரசியலில் மாற்றம் நிகழ்த்தப் போகிறேன் என்று கிளம்புகிறார். அவரது குடும்பம் சட்ட வல்லுநர்களைக் கொண்டிருக்க அப்பாவே நீதிபதியாக இருந்தும், அத்தனை பேரின் அறிவுரையையும் மீறி தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார் அஞ்சனா. சட்டமன்றத்தை முற்றுகையிடப் போகிறோம் என்று…

Read More

தி டோர் திரைப்பட விமர்சனம்

by by Mar 27, 2025 0

ஒரு கதவு – அந்தக் கதவுக்குப் பின்னால் என்ன நடக்கிறது… அல்லது அதைத் திறந்தால் என்ன நடக்கும் என்பது மாதிரியான எதிர்பார்ப்பில் போனீர்களானால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

இன்னும் சொல்லப் போனால் படத்தில் எந்த டோருக்கும்… அதாவது கதவுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. பிறகு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்றால் நாம் வாழும் உலகத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் பார்க்க முடியாத அளவில் ஒரு கதவு இருக்கிறது அந்தக் கதவைத்…

Read More

ட்ராமா திரைப்பட விமர்சனம்

by by Mar 22, 2025 0

நீரிழிவு நோய் மையங்களுக்குப் போட்டியாக அங்கங்கே முளைத்து வருகின்றன செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள். அவற்றில் என்ன விதமான மோசடிகள் நடக்கின்றன – அல்லது நடக்கலாம் என்பதை முன்வைத்து சொல்லப்பட்ட கதை இது.

இதை ஹைப்பர் லிங்க் முறையில் நான்கு தனித்தனி கதைகளாகச் சொல்லி ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக ஒன்று சேர்க்கும் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன், அதில் சமுதாயத்துக்கான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார். 

ஒரு பக்கம் குழந்தை பிறக்க வழி இல்லாத நிலையில் விவேக் பிரசன்னாவும் சாந்தினி தமிழரசனும் மன…

Read More

அஸ்திரம் திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2025 0

தோல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று சொல்கிற கதை. அதை ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.

குளுகுளுவென்று கொடைக்கானலில் தொடங்கும் கதை ஒரு தற்கொலையின் காரணத்தால் சூடாகிறது. அடிவயிற்றில் கத்தியை இறக்கித் தற்கொலை செய்து கொள்கிறான் ஒரு இளைஞன். 

அதைப் பற்றிய புலன் விசாரணை செய்கிற வேலை, விடுப்பில் இருக்கும் காவல் அதிகாரியான நாயகன் ஷாமிடம் வந்து சேர்கிறது.

அதைப் பற்றிய விசாரணையில் இறங்கும்போது இதே போன்று வேறு சில தற்கொலைகளும் மற்ற…

Read More

வீரத்தின் மகன் திரைப்பட விமர்சனம்

by by Mar 18, 2025 0

மார்பில் ஐந்து குண்டுகள் துளைத்திருக்க, மலர்ந்து கிடந்த பாலகன் பாலச்சந்திரன் பிரபாகரனை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? மரணத்திலும் மறக்க முடியாத அந்தக் காட்சி உலகம் முழுக்க ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது. 

அந்த நிகழ்வை வைத்து ஒரு புனைவான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி.

பல்வேறு அரசியல் நெருக்கடிகள் மற்றும் நிலைப்பாடுகள் காரணமாக கதை ஒரு தீவில் நடக்கிறது என்று மட்டும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இலங்கை என்று சொல்லப்படவில்லை. 

அதேபோல் அந்தத் தீவுக்கு விவசாயம் செய்ய வந்த இனத்தினர் தங்கள்…

Read More

CITY OF DREAMS ஹாலிவுட் பட விமர்சனம்

by by Mar 18, 2025 0

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர் அனைவருக்குமே அது ஒரு கனவு பிரதேசமாகத்தான் இருக்கும். தங்கள் கனவுகள் நிறைவேற அங்கே குடியேற அத்தனை பேரும் ஆசைப்பட்டுச் செல்கிறார்கள்.

ஆனால் அத்தனை பேரின் கனவுகளும் நிறைவேறுவதில்லை. மாறாக, விவரம் தெரியாதவர்கள் அந்த நாட்டின் அடிமைகள் ஆக்கப்படுகிறார்கள் என்கிறது இந்த படத்தின் கதை. 

ஆரி லோபஸ் மெக்சிகோவைச் சேர்ந்த சிறுவன். ஒரு கால்பந்து வீரனாக ஆசைப்பட்டு கையில் கிடைத்த ஒரு கால்பந்து விளையாட்டு விளம்பரத்தை வைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று கால் பந்தாட்ட வீரனாக…

Read More

வருணன் திரைப்பட விமர்சனம்

by by Mar 16, 2025 0

நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் என்பது புராணப் பெயர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே தண்ணீர் தொழில் பற்றிய இந்தக் கதைக்கு வருணன் என்கிற தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுதான் படத்தின் மையக்கரு. ஆனால், படம் முழுவதும் வட சென்னையில் நடப்பதால் ‘தாதா இன்றி அமையாது வடசென்னை’ என்கிற ரீதியில் தண்ணீர்த் தொழிலைக் கையில் வைத்திருக்கும் இரண்டு தாதாக்களின் மோதலைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயவேல் முருகன். 

இதுவரை வடசென்னை என்றாலே…

Read More

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2025 0

1980, 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் கே ரங்கராஜ் இதனை வருடம் கழித்து இந்த 2k யுகத்தில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது. 

அதுவே இந்தப் படத்தை பார்க்கத் தூண்டும் காரணியாக அமைய படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். 

நாயகன் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரத் தொழிலதிபர் அமித்திடம் வேலை பார்க்கிறார். என்ன வேலை என்று…

Read More

ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2025 0

காதலனும், காதலியும் ஒத்த உணர்வில் இருந்தால்தான் காதல் வரும் என்பதில்லை. அவர்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் காதல் மலரும். ஆனால் அந்தக் காதலின் போக்கு எப்படி இருக்கும் என்பதைத் தான் இயக்குனர் இந்தப் படத்தின் மெயின் லைனாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாயகன் ரியோராஜுக்கு பெற்றோரின் திருமண வாழ்க்கை திசை மாறிப் போனதில் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.

ஆனால், நாயகி கோபி ரமேஷ் அப்படியே அவருக்கு நேர்மாறாக திருமணம் செய்து கொண்டு…

Read More

மாடன் கொடை விழா திரைப்பட விமர்சனம்

by by Mar 14, 2025 0

மண்ணின் மணத்தைக் கொண்டு இருக்கும் கிராமத்துக் கதைகள் எப்போதுமே அனுபவங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படமும் கிராமத்துக்.காவல் தெய்வம் சுடலை மாடன் குறித்த நம்பிக்கையில் விளைந்திருக்கிறது.

நாயகன் கோகுல் கவுதம் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள சுடலைமாடனுக்கு வருடம் தோறும் திருவிழா நடக்க, அதைப் பரம்பரை பரம்பரையாக அவர்கள் குடும்பமே எடுக்கிறது.

ஆனால், ஒரு வருடம் அங்கு கூத்துக் கட்டும் திருநங்கை ஒருத்தி இறந்து போக, அதிலிருந்து அந்தத் திருவிழா நின்று போகிறது. அத்துடன் கோகுலின்…

Read More