November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

ஜானி படத்தின் திரை விமர்சனம்

by by Dec 16, 2018 0

நாயகன் பிரஷாந்த் நடித்திருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதற்கு அவர் தந்தை தியாகராஜன் மகனுக்காக மேற்கொள்ளும் படத்தேர்வும் ஒரு காரணம் எனலாம். அப்படி இதுவரை பிரசாந்த ஏற்காத ஒரு கேரக்டரை இதில் ஏற்க வைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு.

முதன்முறையாக இதில் எதிர்மறையான பாத்திரம் ஏற்றிருக்கிறார் பிரஷாந்த். அவரும், அவரது நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாகக் கனவு கண்டு சட்டரீதியாக சூதாட்ட விடுதி, மதுபான விடுதி என்று நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கூடவே இன்னும்…

Read More

சீமத்துரை திரைப்பட விமர்சனம்

by by Dec 7, 2018 0

வாழ்க்கையிலிருந்து சினிமா எடுப்பது ஒரு வகை. சினிமா பார்த்து சினிமா எடுப்பது இன்னொரு வகை. இது இரண்டாம் வகைப்படம் என்று உணரவைக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

ஒவ்வொரு தாய்க்கும் தன் மகன் சீமத்துரைதான் – அவன் என்னதான் ஊரைச்சுற்றி பொறுப்பில்லாமல் அலைந்தாலும். அப்படித்தான் ஏழைத்தாயான விஜி சந்திரசேகரின் மகனாக கீதன் வருகிறார். அப்பா இல்லாத பிள்ளையாக வளரும் அவரை அம்மா செல்லமாக வளர்க்க, அதன் காரணமாகவே ஊரைச்சுற்றிக்கொண்டு லந்து பண்ணித்திரியும் அவருக்கும் சினிமா வழக்கப்படியே ஊர்ப் பெரியமனிதரின்…

Read More

2 பாய்ண்ட் ஓ திரைப்பட விமர்சனம்

by by Nov 29, 2018 0

இன்றைய தேதியில் மூன்றாவது கை, கண், காது ஆகிவிட்ட செல்போன்களைத் தவிர்த்து இந்த உலகை நினைத்துப் பாரக்க முடிகிறதா..?

அப்படி ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை… அதற்கான சாத்தியம் இவற்றுடன் இந்த பூமி பல உயிர்களும் வாழ படைக்கப்பட்டிருக்கையில் மனிதன் மட்டுமே அதைச் சொந்தம் கொண்டாட நினைத்துப் பிற உயிர்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அழிக்கும் அவலத்தையும் கலந்து 475 கோடியில் ஷங்கர் படைத்திருக்கும் மாயக்கோட்டைதான் இந்தப்படம்.

தமிழின் உச்ச நட்சத்திரம் ரஜினி, உச்ச இந்திய இசையமைப்பாளர்…

Read More

செய் திரைப்பட விமர்சனம்

by by Nov 24, 2018 0

நல்ல விஷயங்களைத் தவிர்க்காமல் செய் என்பதுதான் ‘செய்’ என்பதற்கான ஒரு வார்த்தை விளக்கம். அப்படி நாயகன் நகுல் இதில் என்ன நல்லது செய்கிறாரென்று பார்ப்போம்…

நடிகனாகிறேன் பேர்வழி என்று எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நகுலை வேலைக்குப் போகச்சொல்லி அவர் விரும்பும் நாயகி ‘ஆஞ்சல் முஞ்சால்’ (அட… நாயகி நிஜப்பேரே அதுதாங்க..!) கேட்க, அதற்காக வேலைக்குப் போக முடிவெடுக்கும் தருணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டிருந்த அவரது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர, அந்த வேலைக்குப் போகிறார்.

போன…

Read More

திமிரு புடிச்சவன் விமர்சனம்

by by Nov 17, 2018 0

ஒரு நடிகனின் பரிணாமத்தில் காக்கிச் சட்டை போட்டால்தான் அவர் முழுமையான நடிகனாகிறார் என்பது சினிமா சித்தாந்தம். அந்த வகையில் நடிகராகிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ ஆகி விட்டார்.

ஆனால், வழக்கமான போலீஸ் கதைகள் தவிர்த்து இதில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினையை அவர் கையில் கொடுத்து “அட…” போட வைக்கிறார் இயக்குநர் கணேஷா.

சமீப காலங்களில் நடந்த வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இளம் வயது குற்றவாளிகள்தான். இது ஏதோ…

Read More

காற்றின் மொழி விமர்சனம்

by by Nov 16, 2018 0

சமீபத்தில் இப்படி விழுந்து சிரித்து ஒரு படத்தை ரசித்ததில்லை. இதற்கும் இதன் மூலமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்திலும் இத்தனை சிரிக்க வாய்ப்பிருக்கவில்லை. அதுதான் இயக்குநர் ராதாமோகன் – வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கூட்டணியின் மேஜிக்.

இன்னொரு விஷயம். படம் ஒன்றும் காமெடிக்கான களமுமில்லை என்பது. படம் சொல்லு விஷயம் படு சீரியஸானது. எந்த சமூக வெளிப்பாட்டையும் கைக்கொள்ள முடியாத நடுத்தர வர்க்க அதிகம் படிப்பறிவில்லாத பெண்களின் நிலையை அழுத்தமாக முன் வைக்கிறது கதை. ஆனால், அதை அப்படியே…

Read More

விஜய் சர்கார் அமைத்தாரா இல்லையா – விமர்சனப் பார்வை

by by Nov 7, 2018 0

ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை.

இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன.

1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..?
அல்லது
2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..?
அல்லது
3. ரசிகர்களால் இவ்வளவு மலிவாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று ரசிகர்களின் அறிவை மட்டமாக நினைத்து இப்படி படமெடுக்கிறார்களா..?

ஏற்கனவே கே.பாக்யராஜ் விலாவாரியாக சொல்லி அரவக்குறிச்சி முதல் அன்டார்டிகா வரை சர்கார் கதை அத்துப்படி ஆகிவிட்டதால்…

Read More

வன்முறை பகுதி படத்தின் விமர்சனம்

by by Nov 1, 2018 0

படத்தின் தலைப்பையும், இதற்கான புகைப்படங்களையும் பார்த்துவிட்டு “இந்தப்படத்துக்கெல்லாம் விமர்சனம் அவசியமா..?” என்ற கேள்வி எழலாம். படம் பார்க்கும்வரை அதே நினைப்புதான் இருந்தது. ஆனால், பார்த்து முடித்தவுடன் ஏற்பட்ட விளைவு வேறு… மேலே படியுங்கள்..!

படம் எப்படிப்பட்டது என்று தலைப்பிலேயே ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு…’ என்று வீச்சரிவாள் வீசியதைப் போல சொல்லி விட்டார் இயக்குநர் ‘நாகா’ என்கிற நாகராஜ். (நாகா என்ற பெயரிலும் நாகராஜ் (தினந்தோறும்) என்ற பெயரிலும் ஏற்கனவே இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் வேறு……

Read More

ஜீனியஸ் விமர்சனம்

by by Oct 30, 2018 0

‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ பார்க்கும்போது மகன் வீராட் கோலி ஆக வேண்டும் என்றும், விஜய் டிவி பார்த்து “என் மகன் சூப்பர் சிங்கரா ஆகணும்…” என்றும், அடுத்த வீட்டுப் பையன் அமெரிக்காவில் செட்டில் ஆனதைக் கேட்டு என் பிள்ளை ஆஸ்திரேலியாவில் ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்றும் அதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்குபவரா நீங்கள்..?

உங்களுக்காகத்தான் இந்தப் படம். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பெற்றோர் இந்த ரகம்தான். ஆக, ஒட்டுமொத்த பெற்றோருக்கான ஒரு பாடம்தான் இந்தப்படம்.

அறிவாளியான குழந்தையைப் பெற்றவர்கள் அந்த…

Read More

சண்டக்கோழி 2 திரைப்பட விமர்சனம்

by by Oct 18, 2018 0

இது இரண்டாம் பாகங்களின் சீசன் என்பதால் தங்கள் பங்குக்கு இயக்குநர் லிங்குசாமியும், விஷாலும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள், தங்களது வெற்றிப்படைப்பான சண்டக்கோழியின் இரண்டாம் பாகத்தில்.

முதல் பாகம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து வெளியாகும் இரண்டாவது பாகப் படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். காரணம் முதல் பாகம் ஒரு ஆக்‌ஷன் படம் எப்படி இருக்க வேண்டுமோ அதன் முழுத்தன்மையுடன் வெளியாகி பாராட்ட வைத்தது. 

இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்றால் “ஆமாம்…” என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால்,…

Read More