November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

பிகில் திரைப்பட விமர்சனம்

by by Oct 25, 2019 0

அமீர் கான் ‘டங்கல்’ படத்திலும், மாதவன் ‘இறுதிச் சுற்று’ படத்திலும், சிவகார்த்திகேயன் ‘கனா’விலும், சசிகுமார் ‘கென்னடி கிளப்’பிலும்… பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த கதையெல்லாம் பழசாகிப்போனது விஜய்க்கு… இயக்குநர் அட்லீக்கு… கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு… ஒருவருக்குமா தெரியவில்லை..?

இவ்வளவு ஏன்..? நேற்று முளைத்த ஹிப் ஹாப் ஆதி கூட ‘நட்பே துணை’ படத்திலும் இதே டெம்ப்ளேட் கதையில்தான் நடித்து அவரளவில் ஹிட் அடித்தார்..!

ஒரு முன்னாள் விளையாட்டு வீரர் சந்தர்ப்ப வசத்தால் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போய்,…

Read More

கைதி திரைப்பட விமர்சனம்

by by Oct 25, 2019 0

அதென்னவோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இரவின் மேல் அப்படியொரு காதல். தன் முதல் படத்தில் ஒரு இரவில் நடந்த ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு மாலையாகக் கட்டியவர், இந்தப்படத்தில் மாலையை உதிர்த்தது போல் ஒரே கதைக்குள்ளிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சிதறி விட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.

நகரில் பரவிக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யம்தான் அடித்தளம். அப்படி 800 சொச்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் போலீஸ் வசம் சிக்க, அதை வைத்து அந்த கும்பலின் மூளையானவனைப் பிடிக்க போலீஸ்…

Read More

காவியன் திரைப்பட விமர்சனம்

by by Oct 20, 2019 0

ஷாம் நடிப்பில் நீண்ட காலம் கழித்து வந்திருக்கும் படம். இதில் ஷாம் காவல்துறை அதிகாரியாக வருகிறார். பயிற்சிக்காக அவர் அமெரிக்கா செல்ல, அங்கே அவர் அமெரிக்க அதிகாரிகளுக்கே பயிற்சி கொடுக்கும் அளவில் பணியாற்றுவதுதான் கதை.

அமெரிக்கா என்றாலே ‘சைக்கோ கில்லர்’ கதை தோன்றுகிறதா அல்லது ‘சைக்கோ கில்லர்’ கதை என்றாலே அமெரிக்கா போய் விடுகிறார்களா தெரியவில்லை. இதிலும் அப்படி ஒரு கில்லர் இளம் பெண்களை அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்களை…

Read More

பெட்ரோமாக்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Oct 13, 2019 0

கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது.

ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று ‘பயமாக’ இருக்கிறது.

தங்கள் பூர்விக வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் குடியேற நினைக்கும் பிரேம் அதற்கான வேலைகளில் இறங்க, அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாக நம்பி யாரும் அதை வாங்க முன்வராமல்…

Read More

பப்பி திரைப்பட விமர்சனம்

by by Oct 12, 2019 0

‘பப்பி’ என்றொரு நாய் படத்தில் வருகிறது. ‘அதைப் பற்றிய கதையா இந்தப்படத்தில் சொல்லப்படுகிறது..?’ என்றால் ‘அது இல்லை..!’. நாயகன் வருணின் ‘பப்பி லவ்’ பற்றி சொல்ல வருகிற கல்லூரி பருவத்துப் படம்.

எப்போதுமே பாலியல் நினைப்பில் வரும் வருண் போலவேதான் எல்லாரும் தங்கள் மாணவப்பருவத்தில் இருக்கிறார்களா..? என்று கேட்கப்படாது. இப்படி இருக்கும் இளைஞர்களுக்கான படம் என்று கொள்ளலாம்.

கல்லூரி மாணவராக இருக்கும் வருணுக்கு கூடா நட்பால் ‘பால் ஈர்ப்பு’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் போய் ஒரு ஜோடிக்கு…

Read More

அருவம் திரைப்பட விமர்சனம்

by by Oct 11, 2019 0

தமிழில் வெளிவந்த ‘அந்நியன்’, ‘வேலைக்காரன்’ படங்களின் வரிசையில் அவற்றுக்கு நிகரான ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கதைக்களம். 

உடனே நிமிர்ந்து உட்காரத் தோன்றுகிறதல்லவா..? இப்படித்தான் இந்தக் கதையைக் கேட்டோர் ஒவ்வொருவரும்… இந்தப்படத்து ஹீரோ சித்தார்த் முதற்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், திரைக்கதை மற்றும் படமாக்கத்தில் எப்படிச் சொதப்பி ஒரு நல்ல கதையைக் காலி பண்ணலாம் என்பதற்கும் இது ஒன்றே உதாரணப் படம்.

அருமையான மந்திரங்கள் கையில் கிடைத்தும் பாபா படத்தில் ரஜினி காத்தாடி பிடிப்பதற்கும், அது கையில் வந்து…

Read More

100 % காதல் திரைப்பட விமர்சனம்

by by Oct 4, 2019 0

ஒரு காதல் படத்துக்கு என்ன வேண்டும்..? முதலில் களையான… முக்கியமாக இளமையான ஒரு ஜோடி வேண்டும். அந்த முதல் விஷயத்தில் இதில் ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே ஜோடி அற்புதமாகப் பொருந்தி இருக்கிறது. அதில் இயக்குநர்-தயாரிப்பாளர் எம்.எஸ்.சந்திரமௌலிக்கு முதல் வெற்றி கிடைத்துவிடுகிறது.

அடுத்தது இருவரும் காதலிப்பதற்கேற்ற களம். அதில் ஜிகு ஜிகுவென்று காதல் பற்றிக்கொள்ள ஏதுவாக ஈகோவினால் உண்டாகும் ஊடல் கொண்ட திரைக்கதை. அதையும் தெலுங்கிலிருந்து இறக்கியாகி விட்டது. 

அடுத்து துள்ளலான இசை. கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவு. படத்தின்…

Read More

அசுரன் திரைப்பட விமர்சனம்

by by Oct 4, 2019 0

வட சென்னையில் வஞ்சக முகங்களைத் திரையில் காட்டிய வெற்றிமாறன் அடுத்த முயற்சியாக நெல்லைச் சீமைக்குப் பயணப்பட்டு நெகிழ வைக்கும் கதை ஒன்றைச் சொல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். அதற்கு உந்து சக்தியாக பூமணி எழுதிய ‘வெக்கை’ புதினமும், உறுதுணையாக தனுஷும், ஆதாரமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவும்  இருந்திருக்கிறார்கள். 

தனுஷ் ஏற்றிருக்கும் சிவசாமி என்கிற நடுத்தர வயதுடைய, சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மனிதனின் கதையை ரத்தமும், கண்ணீரும் தெறிக்கச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். பஞ்சமி நில மீட்பு காலத்தில் தொடங்கித் தொடர்கிற…

Read More

சூப்பர் டூப்பர் திரைப்பட விமர்சனம்

by by Sep 22, 2019 0

கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள போதை வஸ்து கடத்தலில்… பணத்துக்காக பெண்ணைக் கடத்தும் நாயகன் புகுந்து என்ன செய்கிறார் என்கிற லைனைக் கதையாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏகே என்கிற அருண்கார்த்திக்.

நாயகன் துருவா, தன் மாமன் ஷாராவுடன் சேர்ந்து நாயகி இந்துஜாவை பணத்துகாகக் கடத்துகிறார். அழகான பெண்ணைக் கடத்தும்போது ஏற்படும் ஈர்ப்பில் இந்துஜா மீது துருவா காதல் வயப்பட, அதற்காக இந்துஜாவின் குடும்பம் இருக்கும் போராட்ட சூழலுக்குள் பயணிக்கிறார். அதன் மூலம் இந்துஜாவுக்கே தெரியாத அவர் குடும்பத்து…

Read More

சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்பட விமர்சனம்

by by Sep 8, 2019 0

கடந்த ‘பிச்சைக்காரனி’ல் அம்மா சென்டிமென்டைப் போட்டுத்தாக்கி தமிழிலும், தெலுங்கிலும் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இதில் ‘மாமன், மச்சான்’ என்று இதில் ஒரு சென்டிமென்ட்டைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சசி.

அக்கா, தம்பியான லிஜா மேனனும், ஜி.வி.பிரகாஷும் பெற்றோரின்றி வளர்வதால் ஒருவருக்கொருவரே அம்மா, அப்பாவுமாக வாழ்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் வளர்ந்து பைக் ரேஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு ரேஸில் அவரைப் பிடிக்கும் டிராபிக் போலீஸ் அதிகாரியான சித்தார்த் வரம்பு மீறி அவரைத் தண்டித்துவிட, அவர் மீது ‘கொலை காண்டா’க…

Read More