May 17, 2024
  • May 17, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

வஞ்சகர் உலகம் விமர்சனம்

by by Sep 8, 2018 0

ஒரு வெளிநாட்டுக்காரரிடம் நம்ம ஊர் ஃபுல் மீல்ஸை வைத்தால் அவர் எப்படி சாப்பிடுவார்..? ரசத்தை முதலில் ஊற்றி சாப்பிட்டு விட்டு பிறகு மோர்சாதம், சாம்பார் சாதம் என்று சாப்பிடக்கூடும் இல்லையா..? அப்படிதான் ஆகிறது நம்ம ஊருக்குக் கதை எழுதும்போது ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை எழுதினால்.

அப்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் பயின்று அமெரிக்கப் படங்கள் போல புதுமாதிரி கதை சொல்லலில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா.

எங்கோ ஆரம்பிக்கிற கதையில் நாயகன் சிபி புவனசந்திரன், எரிகின்ற காருக்குள்…

Read More

தொட்ரா விமர்சனம்

by by Sep 7, 2018 0

இந்த நாகரிக உலகில்கூட இன்னும் தமிழ்நாட்டளவில் விரவிக் கிடக்கும் சாதீய உணர்வுகளையும், அதன் காரணமாக காதலில் விளையும் ஆணவப் படுகொலைகளையும் அப்பட்டமாக சுட்டிக் காட்டும் படம்.

அதிலும் நாம் சமீப காலங்களில் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஆணவக் கொலைக்கு ஆளான காதல்களைக் கோர்த்து ஒரு திரைக்கதையை எழுதி பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ்.

நாயகனுக்கு ‘சங்கர்’ எனவும், நாயகிக்கு ‘திவ்யா’ எனவும் பெயர் வைத்திருப்பதிலும், முதல் காட்சியில் இதயத் துடிப்பு எகிற நாம் சமீபத்தில் பார்த்து பதைபதைத்த…

Read More

60 வயது மாநிறம் திரைப்பட விமர்சனம்

by by Sep 3, 2018 0

பல படங்கள் சினிமாவை நம்பியிருப்பவர்களை வாழவைக்கும். சில படங்கள் மட்டுமே சினிமாவை வாழ வைக்கும். அந்த வரிசையில் இந்தப்படத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எத்தனை மேன்மையானது என்பதை தனக்கே உரிய ‘கிளாஸிக் டச்’ கொடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். அதைத் தோள் கொடுத்துத் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள் கதையின் நாயகனாகியிருக்கும் பிரகாஷ்ராஜும், துணிந்து இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் கலைப்புலி எஸ்.தாணுவும்.

அம்மா புற்றுநோயால் இறந்துவிட, அன்பைப்பொழிந்து வளர்ந்த அப்பாவும் ‘அல்சைமர்’ என்னும் மறதிக்குறைபாட்டால் அவதிப்பட, அவரை காப்பகத்தில்…

Read More

லக்ஷ்மி திரைப்பட விமர்சனம்

by by Aug 25, 2018 0

நூறாண்டு கண்ட சினிமாவில் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து புழங்கி வந்திருக்கும் கதை. ப்ரீ கேஜி குழந்தை கூட அடுத்து என்ன நடக்கும் என்று கண்டுபிடித்து விடக்கூடிய திரைக்கதை. அப்புறம் என்ன…. ஆ…வ்…!

லக்ஷ்மியாக நடித்திருக்கும் தித்யாவுக்கு நின்றால் நடனம், நடந்தால் நடனம், சாப்பிட்டால் நடனம், பஸ்ஸில் ஏரினால் நடனம், அட… படுத்தால் கூட நடனம்தான். தந்தை இல்லாமல் அல்லது அவர் என்ன ஆனாரென்றே தெரியாமல் நடனத்தை வெறுக்கும் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷுடன் தித்யா வாழ்ந்து கொண்டிருக்க, வருகிறது…

Read More

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

by by Aug 24, 2018 0

உலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என்பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம்.

இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன் சிறுவன் என்பதால் கொலைப்பழியை அவன் ஏற்றுக்கொண்டால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியுடன் தன்டனை முடிந்துவிடும் என்று சிறுவயது கிஷோர் நினைக்க அதற்கு அவன் உடன்படாததால்…

Read More

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

by by Aug 21, 2018 0

‘யு டியூப்’களிலும், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்புகளிலும் நாம் அன்றாடம் பார்த்து பதைபதைக்கும் சங்கிலிப் பறிப்புகளின் பின்னணியும், அதற்கான கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் குரலும்தான் இந்தப்படம்.

இயக்குநர் ராகேஷின் இந்த முயற்சிக்கான பாராட்டுடனேயே ஆரம்பிக்கலாம்.

சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் தலைநகரில் அவர்களிடமிருந்தே அந்த நகைகளை அபகரிக்கும் ஹீரோ நிமிர்ந்து உட்கார வைக்கிறார். ஆனால், அதைத் தொடர்ந்து அவரும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து சங்கிலிகளைக் குறிவைக்க, அது ஏன் என்கிற சஸ்பென்ஸ்தான் மீதிக்கதை.

நாயகனாக திலகர்…

Read More

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

by by Aug 18, 2018 0

வழக்கமாக மலையாள படைப்பாளிகள் எடுக்கும் படங்கள் நமக்குப் பிடித்தவையாக இருக்கும். மலையாள இயக்குநர்களுக்கென்று ஒரு கதை சொல்லலும் இருக்கும்.

ஆனால், தமிழில் இது ‘பிளாக் ஹியூமர்’ பட சீசன் என்பதாலோ என்னவோ கேரளாவிலிருந்து வந்து தமிழ்ப்படமெடுத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் நிஷாந்த் ரவீந்திரனும், ஜதின் ஷங்கர் ராஜும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் பட வரிசையிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

‘ஓடு ராஜா ஓடு’ என்பது ஒவ்வொரு விஷயத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஐந்து ‘செட்’ பாத்திரங்களைப் பற்றிய கதை.

அவர்களில் குரு சோமசுந்தரம், லஷ்மிப்ரியா…

Read More

விஸ்வரூபம் 2 விமர்சனக் கண்ணோட்டம்

by by Aug 11, 2018 0

கமல் ஒரு சகலகலா வல்லவர். அவருக்கு எல்லாக் கலைகளும் தெரியும் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். அதில் சமையலும் அடக்கம்..!

அந்த வகையில் மீந்துபோன புளித்த மாவில் புதிதாக வெங்காயம் சேர்த்து அவர் ஊற்றியிருக்கும் ஊத்தப்பம்தான் இந்த விஸ்வரூபம் 2. எப்படி ‘ஊத்தி’யிருக்கிறார் பார்ப்போம்.

கமல் என்கிற மகா கலைஞனை நாம் போற்றுகின்ற அளவுக்கு… கொண்டாடுகின்ற அளவுக்கு அவர் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறாரா என்றே புரியவில்லை. வழக்கமான தமிழ் சினிமாவைப்பற்றி ஒருமுறை அவர், “மணியடித்தால் சோற்றுக்கு வாலாட்டும் நாயாகத்தான்…

Read More

மணியார் குடும்பம் விமர்சனம்

by by Aug 9, 2018 0

வாழ்ந்து கெட்ட ஒரு பரம்பரையின் வாரிசான அப்பாவி கிராமத்துப் பெரிய மனிதரான ‘தம்பி ராமையா’ தன் மகன் ‘உமாபதி ராமையா’வையும் அவ்வாறே பொறுப்பில்லாமல் வளர்க்கிறார். அதனால், உமாபதியின் முறைப்பெண்ணைக் கட்டிவைப்பதில் கூட சிக்கல் வருகிறது.

அங்கே சுதாரித்து அந்த முறைப்பெண்ணான மிருதுளா முரளியின் ஆலோசனைப்படியே ஒரு பங்குத் தொழில் தொடங்க நினைத்து மக்களிடம் பணம் வசூலிக்க, அதை கால்டாக்ஸி டிரைவரான ‘மொட்ட ராஜேந்திரன்’ ஆட்டையைப் போட, நல்ல மனிதர் பெயரெடுத்த ராமையாவின் குடும்பத்தினர் கெட்ட பெயரெடுத்து அல்லல்…

Read More

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

by by Aug 6, 2018 0

‘தமிழ்நாட்டில் எல்லோரும் வாழலாம். ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்…’ என்ற ஆரோக்கியமான சிந்தனையுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் யுரேகா. ஆனால், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்பதுதான் ஆகப்பெரிய கேள்வி.

தன் போக்கில் போகக்கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘காளி’தான் ஹீரோ. அதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் அவரிடம் நகரைக் கலக்கும் ‘சைக்கோ’ ஒருவனைப் பிடிக்கும் பொறுப்பை போலீஸ் கமிஷனர் ஒப்படைக்கிறார். இவரே கோக்குமாக்கான ஆளாக இருக்க, அந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றினாரா என்கிற கதை.

காட்டாற்று வெள்ளமான…

Read More