கமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
நான் சந்தித்த கடைசித் தேர்தல் இது – சித்தராமையா
நேற்று நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
“கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அவரிடம், கர்நாடகத்துக்கு தலித் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ’’தலித் ஒருவரை கர்நாடகா முதல்வராக கட்சி மேலிடம் தேர்வு செய்தால் அதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை,…
Read Moreகர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு : பாஜக ஆட்சியைப் பிடிக்கும் – எடியூரப்பா
கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தளில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது…
தேர்தல் முடிவு தெரியும் தினமான மே 15-ல் கர்நாடகாவில் முதல்வரும், காங்., தலைவருமான சித்தராமையா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வாரா அல்லது பா.ஜ.வின் எடியூரப்பாவிடம் தோற்று ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பாரா என்பது தெரிந்து விடும்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க 222 இடங்களிலும், காங்கிரஸ் 220, ஜனதா தளம் பகுஜன்சமாஜ் கூட்டணி கட்சி 199 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஷிகார்பூரில் ஓட்டளித்த…
Read Moreமோடி பொய் சொல்லிக்கொண்டே போகிறார் – பிரகாஷ்ராஜ் தாக்கு
தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் –
“இந்திய சரித்திரத்தில் இப்படி பொய் சொல்கிற பிரதமரை என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. அவருக்கு எதுவுமே தெரியாது. பொய் சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். அந்த பொய்களுக்கு நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் நான் ஒரு குடிமகன்.
நான் எந்த கட்சியையும் சாரதவன். நான் ஒரு கலைஞன். கட்சியில் இருந்து வளர்ந்தவன் கிடையாது…
Read Moreமோடியிடம் சித்தராமையா 100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வழக்கறிஞர் உக்ரப்பா, பா.ஜ.க. தேசிய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்களை அனுப்பி வைத்துள்ளார்.
பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ்களின் நகலில் இருந்து:-
‘எனது கட்சிக்காரரான முதல் மந்திரி சித்தராமையா மீது தரக்குறைவான கருத்துக்களையும் பொய் கருத்துக்களையும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். சித்தராமையா மீது சுமத்தப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை…
Read Moreஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா
கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சொனியாவும் வரும் 8ம்தேதி ஒரே நாளில் பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்நிலையில், பெலகாவியில் நேற்றைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றார். எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டினார்.
அத்துடன் நிற்காமல், யாரெல்லாம் ஓட்டு…
Read Moreயஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்தனர்
தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பாஜக அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திரசேகர் ராவைத் தொடர்ந்த சின்ஹாக்களின் சந்திப்பு…
Read Moreஉச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று…
Read Moreகாவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்
காவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…
“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படையினரை…
Read Moreதமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதி மன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதற்கு இன்னும் மூன்று நாட்களே…
Read More