நேற்று நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
“கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அவரிடம், கர்நாடகத்துக்கு தலித் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ’’தலித் ஒருவரை கர்நாடகா முதல்வராக கட்சி மேலிடம் தேர்வு செய்தால் அதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை, ஆனால், நான் சந்தித்த கடைசி தேர்தல் இது தான்..!’’ என்றார்.