June 13, 2025
  • June 13, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு : பாஜக ஆட்சியைப் பிடிக்கும் – எடியூரப்பா
May 12, 2018

கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு : பாஜக ஆட்சியைப் பிடிக்கும் – எடியூரப்பா

By 0 1225 Views

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தளில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது…

தேர்தல் முடிவு தெரியும் தினமான மே 15-ல் கர்நாடகாவில் முதல்வரும், காங்., தலைவருமான சித்தராமையா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வாரா அல்லது பா.ஜ.வின் எடியூரப்பாவிடம் தோற்று ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பாரா என்பது தெரிந்து விடும்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க 222 இடங்களிலும், காங்கிரஸ் 220, ஜனதா தளம் பகுஜன்சமாஜ் கூட்டணி கட்சி 199 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஷிகார்பூரில் ஓட்டளித்த பா.ஜ. முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா கூறியது, பா.ஜ. 150 தொகுதிகளின் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும், கர்நாடகாவில் எனது தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

மும்முனைப் போட்டி நிலவும் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்பு இருப்பதால் தேசமே இந்தத் தேர்தலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.