December 27, 2024
  • December 27, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

காவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல – ரஜினி

by by May 20, 2018 0

இன்று ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் போயஸ் கார்டனிலுள்ள தன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில்களின் சாரம்…

பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்.

150 தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே.

கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர்…

Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டாக்சி கட்டணம் உயரும் அபாயம்

by by May 19, 2018 0

தினமும் விலை ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் மாநில வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் கூறப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 6 நாட்களில் பெட்ரோல்…

Read More

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

by by May 15, 2018 0

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது வயது 71.

தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலகுமாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். தவிர, சினிமாவுலகிலும் புகழ்பெற்றிருந்த அவர் கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி, இலக்கிய சிந்தனை உள்ளிட்ட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப…

Read More

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை

by by May 13, 2018 0

ரஜினி இந்த மாதம் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

இன்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

அத்துடன் பி.ஜே.பியுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்க, “வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும்…” என்று…

Read More

உ.பியில் பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் புகார்

by by May 12, 2018 0

உ.பியைச் சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மாவின் மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்..

மேலும், உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அப்பெண் எழுதியுள்ள கடிதத்தில், தனது குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை தெரிவிக்க முதல்-மந்திரியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தனது நற்பெயரை சீர்குலைக்க…

Read More

காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

by by May 9, 2018 0

ரஜினிகாந்த் நடித்து ஜூன் 7-ம்தேதி வெளியாகவிருக்கும் ‘காலா’வின் பாடல்கள் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இருந்தும், பாடல்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸை இன்று தனது ட்விட்டர் வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டு விட்டார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த பாடல்களில் ரஜினி ரசிகர்கள் குஷியடைந்து வரும் நிலையில் சில பாடல் வரிகள் அரசியலுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கருத்தும் பரவி வருகிறது.

அந்தப்பாடல் வரிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த…

Read More

தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

by by May 8, 2018 0

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளுடன், இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டனர்.

இதனைத் தடுக்க, தலைமை செயலகத்துக்குச் செல்லும் சாலையில் தடுப்பு வேலி அமைத்து ஆறாயிரம் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தினர். கடற்கரை சாலை, காமராஜர் சாலையிலும் வாகன சோதனை நடந்தது.

இந்த நடவடிக்கையின் முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டிருக்க , இன்று காலை சென்னை…

Read More

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த நீட் எப்படி..?

by by May 6, 2018 0

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் பேர் பங்கேற்றனர்.

வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், சென்றனர். இவர்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு சென்றனர். மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களுக்குச் சென்றனர்.

தமிழகத்தில்,…

Read More

நீட் எழுத வெளிமாநிலம் செல்வோருக்கு பயணத்தொகையுடன் ரூ.1000 – தமிழக அரசு

by by May 4, 2018 0

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதிக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது.

இதில் பங்கேற்க விண்ணப்பித்த தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மாநில அளவில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளிமாநிலங்களுக்கு…

Read More

பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்

by by May 3, 2018 0

தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுவது இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்த வருடம் முதலாக ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று (மே 3) முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018

Read More