September 16, 2024
  • September 16, 2024
Breaking News
May 9, 2018

காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

By 0 989 Views

ரஜினிகாந்த் நடித்து ஜூன் 7-ம்தேதி வெளியாகவிருக்கும் ‘காலா’வின் பாடல்கள் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இருந்தும், பாடல்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸை இன்று தனது ட்விட்டர் வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டு விட்டார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த பாடல்களில் ரஜினி ரசிகர்கள் குஷியடைந்து வரும் நிலையில் சில பாடல் வரிகள் அரசியலுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கருத்தும் பரவி வருகிறது.

அந்தப்பாடல் வரிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்..!” என்றார்.

இன்று மாலை பாடல்களின் வெளியீடு பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இருக்கும் நிலையில் இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.