September 15, 2024
  • September 15, 2024
Breaking News
May 12, 2018

உ.பியில் பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் புகார்

By 0 1027 Views

உ.பியைச் சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மாவின் மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்..

மேலும், உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அப்பெண் எழுதியுள்ள கடிதத்தில், தனது குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை தெரிவிக்க முதல்-மந்திரியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தனது நற்பெயரை சீர்குலைக்க சமாஜ்வாடி கட்சி தீட்டிய சதி என்று ரோஷன்லால் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளது ஒரு புறமிருக்க, குற்றம் சாட்டிய பெண்ணுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.