January 10, 2025
  • January 10, 2025
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

by by Jul 12, 2020 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம்…

Read More

கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்

by by Jul 10, 2020 0

உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரசை 6 மாதங்களைத் தாண்டியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தடுப்பூசியும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன.

அதற்குள் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக எச்சரித்துள்ளது. அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம்.

அந்த, பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவிச்சிருக்குது. அதாவது கடந்த மாதம் மட்டும்…

Read More

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது

by by Jul 9, 2020 0

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியது.

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர்….

Read More

கொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ

by by Jul 7, 2020 0

நகர மத்தியில் ஓடிய கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை, கவச உடையில் சினிமா பாணியில் விரட்டி பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர் கேரள போலீசார்.

இந்தகாட்சியை நேரில் பார்த்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு வெலவெலத்துப் போனார்கள்.

பத்தனம்திட்டா நகரில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில், முக கவசம் சரியாக அணியாமல் கழுத்தில் மாட்டியபடி ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றனர்.

அதற்கு அந்த நபர், ‘நான் ஒன்றும் கொரோனா நோயாளி அல்ல. அதற்காக சவுதியில்…

Read More

கொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை

by by Jul 6, 2020 0

சீனாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பையும், மரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின்  இரண்டாவது அலை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
 
இந்நிலையில கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று முன்தினம் சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு…

Read More

ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

by by Jul 3, 2020 0

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

COVAXIN - vaccine for Covid 19 COVAXIN – vaccine for…

Read More

தமிழகத்தில் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது – பால் முகவர்கள் சங்கம்

by by Jun 26, 2020 0

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு பால் முகவர்களை பால் விநியோகம்…

Read More

சபரிமலை சர்ச்சை ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ – வழக்கு பதிவு

by by Jun 25, 2020 0

பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை அடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர்.

ரெஹானா பாத்திமா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இப்போது, அதே பாத்திமா புதியதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரெஹானா பாத்திமா, ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண…

Read More

கொரோனா சோகம் நெல்லை இருட்டுக்கடை அல்வா அதிபர் தற்கொலை

by by Jun 25, 2020 0

நெல்லையில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங். வயது 76.
 
இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Iruttu kadai halwa
 
அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டார். தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ததாக…

Read More

வட சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ அணிவகுப்பு வீடியோ

by by Jun 25, 2020 0

சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது.

இதில் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை.

இதனால் தற்போது கமாண்டோ…

Read More