April 28, 2024
  • April 28, 2024
Breaking News
July 3, 2020

ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

By 0 675 Views

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

COVAXIN - vaccine for Covid 19

COVAXIN – vaccine for Covid 19

இந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் விகே ஸ்ரீனிவாஸ் இந்த மருந்தை தனது உடலில் செலுத்தி சோதனை செய்து வருகிறார்.

இந்தியாவில் கொரானா தடுப்பு ஊசியை முதலில் செலுத்திக் கொண்ட நபர் இவர்தான்.

தனது மருந்து  மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தானே முதல் மனிதராக சோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறார் டாக்டர் ஸ்ரீநிவாசன். 

இந்நிலையில் இன்று ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதாவது ஜூலை 7-ம் தேதிக்குள் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை விரிவுபடுத்த வலியுறுத்தியுள்ளது.

மேலும் சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15-ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை வெற்றிபெற்று மனித குலம் தழைக்கட்டும். நிம்மதி பிறக்கட்டும்..!