மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் புதிய இந்திப்படத்தில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தில் வித்யுத் ஜம்வால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில்தான் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம்.
ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்துப்…
Read Moreகாலம் சிலரின் வாழ்வில் மட்டும் எப்படிக் கொடுமையாக நடந்து கொள்கிறது என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் எம்.நாகராஜன்.
சிறிய வயதிலேயே தன் பெற்றோரைப் பறிகொடுக்கும் பிரசன்னா, தன்னைப் போலவே தன் பிறந்த நாளில் அம்மாவைப் பறிகொடுக்கும் கலையரசனின் உற்ற நண்பனாகிறார். இந்த நட்பு அவர்கள் வாலிபம் வரை தொடர்கிறது. அப்பாவுடன் வாழ்ந்து வரும் கலையரசனும் தன் சகோதரன் போலவே பிரசன்னாவை நடத்தி வர, இருவருக்கும் காதலும் முளைக்கிறது.
பிரசன்னா சிருஷ்டி டாங்கேவையும், கலையரசன் சாய் தன்ஷிகாவையும் காதலிக்கிறார்கள். இதனிடையே…
Read Moreசின்னத்திரை உலகில் கடந்த ஐந்து வருடங்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் செயலாற்றி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமானது ‘ஸ்ரீ பாரதி அசோசியேட்’ நிறுவனம்.
‘ஸ்ரீ பாரதி குரூப்’பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களைத் தயாரித்து ராஜ் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி, ரேடியோ மிர்ச்சி என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பி வருகிறது.
இந்நிறுவனம் தயாரித்துள்ள ‘உறவுகள் சங்கமம்’ மெகா தொடர், சீரியல் வரலாற்றிலயே முதன்முறையாக அதிகப்படியான (40) முன்னணி…
Read Moreஒன்றுக்கும் உதவாத கதையை குப்பைக்கதை என்பார்கள். ஆனால், அதையே தலைப்பில் வைத்ததற்கு இயக்குநர் காளி ரங்கசாமிக்கு அபார தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்தக் கதையின் மேல் அவருக்கு இருக்கும் அசராத நம்பிக்கைதான் அந்த தைரியத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது.
அப்படி என்ன கதை..?
சென்னையின் குப்பத்தில் தாயுடன் வசிக்கும் துப்புறவுத் தொழிலாளராக இருக்கும் தினேஷுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவரது பணியைக் காரணம் காட்டியே பெண் அமையாமல் போக, வெளியூரில் மனீஷா யாதவைப் பார்த்துப் பேசி முடிக்கிறார்கள். ஆனால், தினேஷ் ஒரு…
Read Moreசமீபத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தோர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காக்கிச் சட்டையில் ரத்தக்கறை பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் மட்டுமல்லாமல் பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க வேலைகள் கனஜோராக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நாளை (26 மே) அன்று படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெறுவதாக இருந்தது.
காக்கிச் சட்டையின் கண்ணியம்…
Read Moreதமிழ் சினிமாவில் இரு துருவங்களாகக் கருதப்படும் விஷாலும், சிம்புவும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அதிசயம் சென்னையில் நடந்தது. சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘எழுமின்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது.
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் விஜி. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…
Read More‘வட சென்னை’யில் ஒரு ஆக்ஷன் கதை என்றால் உங்களுக்குள் குப்பையும், கூளமும் அடிதடி வெட்டுக் குத்துமான ஒரு கதை ஓடுகிறதா..?
ஆனால், இந்தப்படம் பார்த்தால் நீங்கள் நினைக்கும் எந்த வழக்கமான அம்சமும் அதில் இருக்காது. அத்துடன் வட சென்னை ஏரியாவை வைத்து இத்தனை டீசண்டான ஒரு ஆக்ஷன் கதையை எந்த இயக்குநரும் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் இயக்குநர் ரவி அப்புலு. (விஜய்யின் ஷாஜகான் இயக்குநர் இவர்தான்… நினைவிருக்கிறதா..?)
இந்தப் படத்தில் இவர் புதுமுக ஹீரோ…
Read Moreநேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பில் ‘கண்மணி பாப்பா’ என்ற படம் வளர்ந்து வருகிறது. வனஷாக்ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிக்கிறார்.
முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி. படம் பற்றி அவர் வாயால் கேட்போம்.
“கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எந்த முன்னேற்றமும்…
Read More