July 18, 2025
  • July 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தூத்துக்குடி துயரம் கருதி சாமி 2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு
May 25, 2018

தூத்துக்குடி துயரம் கருதி சாமி 2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு

By 0 1505 Views

சமீபத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தோர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காக்கிச் சட்டையில் ரத்தக்கறை பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் மட்டுமல்லாமல் பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க வேலைகள் கனஜோராக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நாளை (26 மே) அன்று படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெறுவதாக இருந்தது.

காக்கிச் சட்டையின் கண்ணியம் சொல்லும் இந்தப்பட டிரைலர் வெளியீடு இந்த சமயத்தில் நடைபெறுவது நல்லதல்ல என்பதுடன் தூத்துக்குடியின் ஆறாத ரணம் இன்னும் அலைவீசிக் கொண்டிருக்க, நாளை நடைபெறுவதாக இருந்த டிரைலர் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், “இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல என்பதால் எங்கள் ‘சாமி2′ டிரைலர் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது.

நாம் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்காகவும். இது போன்ற நிகழ்வுகள் இனியும் ஏற்படவோ, தொடரவோ கூடாதெனவும் பிரார்த்திப்போம்..!’ என்று கூறியுள்ளார். டிரைலர் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்.

நல்ல விஷயம் ஷிபு சார்..!