‘ஜோக்கர்’ படத்துக்காக 2017ம் ஆண்டு தேசிய விருது பெற்ற தமிழ்ப்பாடகர் சுந்தரய்யர். தர்மபுரியைச் சேர்ந்த இவருக்கு இந்நேரம் கைக்கொள்ளாத அளவுக்கு வாய்ப்புகளும், படங்களும் குவிந்திருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். அது சொற்ப அளவே நிகழ… அவர் இப்போது சொந்தமாக இசைக்கச்சேரி நடந்தி வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளும் வழிவகைகளைத் தேடும் முயற்சியில் இருக்கிறார்.
அதற்காக நண்பரின் உதவி கேட்டு அவர் எழுதியிருந்த நெகிழ்வான கடிதம் கண்ணில் பட்டு அவர் அனுமதியுடன் இங்கு கடிதத்தின் சில பகுதிகள் மட்டும் பதிவேற்றப்படுகிறது.
இதைக்…
Read More
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிக்க தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.
ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார். அதுதான் சமந்தா.
வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை…
Read More
நடிகை சனம் ஷெட்டி தயாரித்துள்ள ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. ‘பிக் பாஸ் 3’ தர்ஷன் நாயகனாகும் படம் இது. விழாவில் பாத்திமா பாபு பேசும்போது,
“மேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் “இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள்…” என்று கேட்டபோது, “தர்ஷனாக இருக்க விரும்புகிறேன்…” என்று கூறினார்.
அதன்பிறகுதான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘…
Read More
மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா, ‘படைவீரன்’ படம் மூலம் இயக்குநரானார்.
இதையடுத்து, மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டடும்’ படத்தை இயக்கி வருகிறார். தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கயையாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் ராதிகா அப்பா…
Read More
‘தர்மபிரபு’ மற்றும் ‘கூர்க்கா’வின் வெற்றியைத் தொடர்ந்து யோகிபாபு நாயகனாகும் படம் ‘காதல் மோதல் 50 /50’ விரைவில் வெளியாகவிருக்கிறது. ஆக்ஷன் கலந்த பேய்ப்படமாம் இது.
தரண்குமார் இசை அமைக்க, பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.
அஜித், விஜய்யின் படங்கள் எப்படி இருக்கின்றனவோ அது அடுத்த விஷயம். ஆனால், ஆவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து படங்கள் வெளியாவது வரை அப்டேட்டுகளும், தொடர் விவாதங்களும் அலப்பறையாக நடக்கும்.
அஜித் படமான ‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகிவிட, இப்போது விஜய்யின் முறை. அவர் அட்லி இயக்கத்தில் இப்போது நடித்து வரும் ‘பிகில்’ கடைசிக்கட்டத்துக்கு வந்துவிட, அடுத்த படத்தைப் பற்றிய செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
அப்படி அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படம் ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…
Read More
இந்தப்படம் காலத்தின் கட்டாயம் எனலாம். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்கும் படங்கள் பல வந்துள்ளன. அதில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதற்கு முதன்மையான காரணம் இந்த படச் செய்தி இன்றைய நவநாகரிக உலகத்துப் பெண்களின் உரிமை பேசுகிறது.
பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் இன்ன உடை உடுத்த வேண்டும். பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ள வேண்டும். இரவில் வெளியே சுற்றாமல் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். அவளுக்கென்று உடற்கூறுகள் இருக்கின்றன. அதனால்…
Read More