April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி
September 1, 2019

எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி

By 0 1044 Views
Sundar C

Sundar C

‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து….

“நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். இப்போது விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது.

அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் திரைப்படம் இதுதான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.

நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை.

‘முறைமாமன்’ படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் என்றாலும் அப்படத்தை வேறுவிதமாகக் கூறியிருந்தேன். ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’ என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடி படம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘அருணாச்சலம்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது.

இந்தப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் ‘ஆக்‌ஷன்’ என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அனைத்து மொழிகளிலும் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.

இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம்.