July 4, 2025
  • July 4, 2025
Breaking News
September 2, 2019

மிரட்டலுக்கு பயப்படாத இயக்குநரின் தைரியம்

By 0 830 Views

நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் இப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் ஃபேஸ்புக் காதல் பற்றியும் முன்வைத்து ஒரு படம் உருவாகிறது. 

அந்தப்படத்துக்கு ‘கருத்துகளை பதிவு செய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ‘ராகுல் பரமகம்சா’ இயக்கியிருக்கிறார். 

ஆர்பிஎச் சினிமாஸ் சார்பாக மும்தாஜ் தயாரிக்கும் இந்தப்படத்தில் எஸ்எஸ்எஸ் ஆர்யன் நாயகனாகிறார். உபாசனா ஆர்.சி நாயகியாகிறார். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, ஒளிப்பதிவை மனோகர் ஏற்கிறார்.

படம் பற்றி இயக்குநர் ராகுல் பரமகம்சா கூறும்போது, “பேஸ்புக்கில் உள்ள அனைத்து பெண்கள் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். 

இந்தப்படம் எடுத்தால் எனக்கு மிரட்டல் வரும் என்று என் நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் சமூகத்திற்கு நல்ல படம் தர வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை நான் எடுத்துள்ளேன்..!” என்றார்.

நல்லா கருத்துகளைப் பதிவு செய்ங்க ராகுல்..!